இசைக் கலை 59. வறிய பாடகர்களே வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்தும் அறநெறியை மேற்கொண்டிருந்தனர். . . . . கடனத்திற்கும் நாடகத்திற்கும் இசை இன்றியமை யாதது. ஆதலால் சங்க காலத்தில் இசையாசிரியர் பலர் இருந்தனர். மாதவி ஆடிய நடன அரங்கில் இசையாசிரியன் இருந்தான் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. பெண்கள் உலக்கை கொண்டு குற்றும பொழுதும் பந்து ஆடும் பொழுதும் ஊசலாடும் பொழுதும் பாடிக்கொண்டே செயல் பட்டனர் என்பதைச் சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையால் அறியலாம். கடற்கரை ஓரத்திலிருந்து இன்பமாகப் பாடும் பாடல் வரிப்பாடல் எனப்பட்டது. அது கானல் வரி எனவும் பெயர் பெற்றது. அப்பாடல்களைச் சிலப்பதி காரத்தில் படித்து மகிழலாம். " மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த எல்லா கின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி ' -சிலப்பதிகாரம், கானல்வரி பல்லவர் காலத்தில் (கி.பி. 300-900) கி. பி. நான்காம் நூற்ருண்டில் தமிழகத்தில் பல்லவ: ராட்சி ஏற்பட்டது. வடநாட்டில் குப்தர் ஆட்சிக் காலத் தில் தோன்றிய நெறி.ஆடிப்பாடிக் கடவுளே வணங்கும்.
பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/74
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை