பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~60 . தமிழகக் கலைகள் பக்திநெறி-தமிழகத்தில் பரவியது. சமணர், பெளத்தர், வைதிகர் நுழைவாலும் செல்வாக்காலும் வடமொழி தமிழகத்தில் கால் கொண்டது. வட சொற்களும், வடமொழி இலக்கண நூல்களும், வழிபாட்டு முறையும் தமிழில் புகுந்தன. இந்த மாறுதல்களைத் திருநாவுக்கரசர் முதலிய சமய குரவர் பாடல்களிலும் ஆழ்வார் பாடல் களிலும் காணலாம். காந்தாரம், தக்கேசி, சாதாரி, காந்தார பஞ்சுரம், கெளசிகம், பேக ராகம் முதலிய பண் வகைகளும் சதகம், தசாங்கம், பதிகம், யமகம் முதலியனவும் வடவர் கூட்டுறவால் நுழைந்தவையாகும். தேவார ஆசிரியரும் பிற சைவப் பெரியார்களும் இசை பாடி இறைவனே மகிழ்வித்தனர்; இறைவனேயே இசை வடிவத்தில் கண்டனர். இயலவன் இசையவன், பண் அவன்' என்றெல்லாம் நாயன்மார்கள் இறைவனைப் பாராட்டியுள்ளனர். ஞானசம்பந்தர் தாளமிட்டுப் பதிகங் களேப் பாடி இறைவனேத் தலங்தொறும் சென்று வணங் கிர்ை. திருகாவுக்கரசரும் சுந்தரரும் இப்படியே இசைபாடி இறைவனைப் போற்றினர். பெண்களும் இறைவனுடைய பல தன்மைகளைப் பாடிக்கொண்டே கழல், பந்து, அம்மானே முதலிய ஆட்டங்களை ஆடினர் என்று சம்பந்தர் பாடல் தெரிவிக்கின்றது. இவ்வாறே இளம் பெண்கள் பூக் கொய்தல், சுண்ணம் இடித்தல் முதலிய பல வேலைகளைச் செய்துகொண்டே இறைவன் சிறப்புக்களே எடுத்துப்பாடி மகிழ்தல் பழைய வழக்கம் என்பதைத் திருவாசகப் பாடல்கள் உணர்த்துகின்றன. - மாடுகளே மேய்த்து வந்த ஆயை நாயனர் புல்ல்ாங் குழலில் ஐந்தெழுத்தினை ஒதி இறைவனே அடைந்தார் என்று பெரிய புராணம் பேசுகின்றது. திருநீலகண்ட யாழ்ப்பாணரும், திருப்பாணழ்வாரும் யாழ் மீட்டியும் பாடியும் பேறு பெற்றனர் என்று நூல்கள் கூறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/75&oldid=863070" இலிருந்து மீள்விக்கப்பட்டது