பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக் கலை 6ţ சமய குரவர் பாக்கள் பல கொல்லி, இந்தளம், கோ மரம், குறிஞ்சி, கட்டபாடை, வியாழக் குறிஞ்சி, செவ்வழி, புறர்ேமை முதலிய தமிழ்ப் பண்களில் பாடப் பட்டுள்ளன. திருநாவுக்கரசர் "ஈசன் எந்தன் இணையடி நீழல் மாசில்லாத வினையொலி போன்றது,' என்று கூறியுள் ளார். இதிலிருந்து அவருடைய இசைப் புலமையையும் இசை இன்பத்தில் ஆழ்ந்து கிடந்த நுட்ப உணர்வினேயும். நாம் நன்கு அறியலாம். சைவ வைணவ சமயங்கள் பல்லவர் காலத்தில் மிகுதியாகப் பரவுவதற்குரிய சிறந்த காரணங் . களுள் இசைப் பாக்களும் ஒன்ருகும். பல்லவப் பெரு. காட்டிலிருந்த பெருங் கோவில்களில் இசை வெள்ளம் கரை புரண்டு ஓடியது என்பதைத் திருமுறைப் பாடல்கள் கொண்டு உணரலாம். ‘' பண்ணியல் பாடல் அருத ஆவூர் ' ' பத்திமைப் பாடல் அருத ஆவூர் ’’ “ பாஇயல் பாடல் அருத ஆவூர் ' “ தையலார் பாட்டு ஒவாச் சாய்க்காடு ' ' மாதர் மைந்தர் இசைபாடும் பூம்புகார் ' இவற்ருல் பெண்களும் ஆண்களும் இசையில் சிறந்திருந்தனர் என்னும் உண்மையை அறியலாம். தேவாரம் குறிக்கும் இசைக் கருவிகள் யாழ், குழல், கின்னரி, கொக்கரி, சச்சரி, தக்கை, முழவம், மொங்தை, மிருதங்கம், மத்தளம், தமருகம், துந்துபி, குடமுழா, தத்தலகம், முரசம், உடுக்கை, தாளம், துடி, கொடுகொட்டி முதலியன. இவற்றுள் பல சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்தவை. வீணே, தமருகம், மிருதங்கம், துந்துபி என்பன வடவர் சேர்க்கையால் நுழைந்தவை என்று கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/76&oldid=863072" இலிருந்து மீள்விக்கப்பட்டது