பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தமிழகக் கலைகள் ஆழ்வார் அருட்பாடல்களும் இவ்வாறே தமிழ்ப்பண் களிலும் வடமொழிப் பண்களிலும் பாடப் பட்டுள்ளன. மகேந்திர வர்மன், இராச சிம்மன் முதலிய பல்லவ மன்னர்கள் இசையில் பெரும் புலமை பெற்றிருந்தனர். குடுமியான் மலையிலுள்ள இசை பற்றிய கல்வெட்டு அப்பர் காலத்தவனை மகேந்திரன் வெட்டுவித்ததாகும். அக் கல்வெட்டுச் செய்திகள் அவனது இசையறிவை நன்கு விளக்குகின்றன. சங்ககாலத்தில் இல்லாத வீணை பல்லவர் வரவால் தமிழகத்தில் நுழைந்தது. இவை ‘எட்டிற்கும் எழிற்கும் உரிய என்று குடுமியான் மலக் கல்வெட்டு இசை பற்றிய செய்திகளைக் கூறுவதால் ஏழு நரம்புகளே யுடைய வீணை, எட்டு நரம்புகளையுடைய வீணே என்பன அக்காலத்தில் இருந்தன என்பது தெரிகிறது. ஏழு நரம்பு களையுடைய வீனேயே எங்கும் இருப்பது. எட்டு நரம்பு கஆளயுடைய வீணேயை மகேந்திரன் புதிதாகக் கண்டு பிடித்தான் போலும் மகேந்திர வர்மன் பரிவாதினி என்னும் பெயர் கொண்ட வீணேயை வாசிப்பதில் வல்ல வகை இருந்தான். 'ஒரு பெண் தன் தோழியை அணேத்துக் கொண்டு படுப்பது போல. மங்கை ஒருத்தி பரிவாதினியை அணைத்துக் கொண்டு உறங்கிள்ை. அந்த வீணே பொன் நரம்புகளே யுடையது' என்று அசுவகோஷர் புத்த சரிகத்தில் கூறியுள்ளார். இக் கூற்றைக் கொண்டு, மகேந்திரன் பயன்படுத்திய புதிய ஆர எத் தகையது என்பதை ஒருவாறு அறியலாம். - இராச சிம்மன் வாத்ய வித்யாதரன் (இசைக் கருவி இசைப்பதில் வித்யாதான ஒத்தவன்), அதோக்ய தும்புரு (வினை, முரசம், குழல், தாளம் இவற்றில் தும்புருவை ஒத்தவன்), வீன காரதன் (வீணை வாசிப்பதில் நாரதனைப் போன்றவன்) என்று காஞ்சி கயிலாசநாதர் கோவில் கல்வெட்டுக்கள் குறித்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/77&oldid=863074" இலிருந்து மீள்விக்கப்பட்டது