பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக் கலை 63 w சோழர் காலத்தில் (கி. பி. 900-1800) வடவர் கூட்டுறவால் பலவகைச் சந்தங்கள் தமிழில் புகுந்தன. வடுகச் சக்தம், கருநாடகச் சந்தம் முதலிய சக்தங்கள் யாப்பருங்கல விருத்தியுரையில் குறிக்கப்பட்டுள் ளன. வேதச் சுலோகங்கள் ஒருவகைச் சந்தத்தில் பாடப் பட்டன. அவற்றைப் பாடியோர் ஆரியம் பாடுவார்' எனப் Li l-L– @JTIT. சிந்தாமணி ஒன்பதாம் திருமுறையிலுள்ள பாக்கள் திரு இசைப் பாக்கள் எனப்பட்டன. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்ருகிய சீவக சிந்தாமணியின் தலைவன் சீவகன். அவன், ஆண்களைப் பார்க்கலாகாது என்று இருந்த சுரமஞ்சரி என்ற பெண்ணைக் கிழவேடத்துடன் சென்று இசைபாடி வென்ருன். அவன் பாடிய இசையைக் கேட்டதும் பெண் கள், வேடன் பறவை போலக் கத்தும் ஓசையைக் கேட்டு மயங்கிக் கூட்டமாக ஓடிவரும் மயில்களைப் போல ஒடி வந்தனராம். - பெரிய புராணம் பெரிய புராணத்திலுள்ள ஆயை நாயனர் புராணத் தில் புல்லாங்குழல் செய்யப்படும் முறையையும் புல்லாங் * குழல் வாசிக்கும் முறையையும் விளக்கமாகக் காணலாம். ஆனயர் புல்லாங்குழலில் ஐந்தெழுத்தை வாசித்த முறை யைச் சேக்கிழார் மிகவும் விளக்கமாக ஏழு செய்யுட்களில் (23-28) பாடியுள்ளார். புல் அருந்திய பசுக் கூட்டங்கள் அக் குழலோசையைக் கேட்டு ஆயைரை அடைந்து தம்மை மறந்து நின்றன. பால் பருகிக் கொண்டிருந்த பசுக் கன்றுகள் பால் உண்ணும் தொழிலை மறந்தன. எருது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/78&oldid=863076" இலிருந்து மீள்விக்கப்பட்டது