பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழகக் கலைகள் களும் மான் முதலிய காட்டு விலங்குகளும் மயிர் முகிழ்த்து வந்து அவர் பக்கத்தில் அணேந்தன; ஆடிக்கொண்டிருந்த மயில்கள் அசைவின்றி அவரிடம் வந்தன; பிற பறவை களும் இசை வயப்பட்டுத் தம்மை மறந்து விட்டன. பிற கோவலர்களும் இசை கேட்ட அளவில் தம் தொழிலை விடுத்து நின்றனர். இவ்வாறு ஆசிரியர் இசையின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளார் (செய்யுள் 30.81). திருநாவுக்கரசரது இறுதிக் காலத்தில் ஆடலிலும் பாடலிலும் வல்ல அழகிய மங்கையரைச் சிவபெருமான் அவரிடம் அனுப்பி, அவரது அழுந்திய பக்தியைச் சோதிக்க விரும்பினர். அம்மங்கையர் திருநாவுக்கரசர் முன்னிலையில் தோன்றி, உரிய கானங்களிலிருந்து நிறைந்து வரும் இசை யால் உண்டாகும் தக்க இனிமையுடன் இசை அமுதைப் பருகச் செய்யும் கொவ்வைக் கனிவாயைத் திறந்து நீல மலர் போன்ற நெடிய கண்களே வெளியில் பரப்பி இசையினைப் பாடலாயினர். . - கம்ப ராமாயணம் இத்தகைய பெருமை வாய்ந்த இசையைப்பற்றிக் கம்பர் பெருமான் யாது. கூறியுள்ளார் என்பதைக் கவனிப் போம்: நாட்டுப் படலத்தில் மருத நிலத்திலும் நெய்தல் கிலத்திலும் எழுகின்ற இசைகள் ஒன்றுபடுவதை அங் குள்ள உயிர்களே அன்றிக் குறிஞ்சி முல்லை நிலங்களி லுள்ள மக்களும் மற்றைய உயிர்களும் அநுபவித்து உறங்கும் திறனைக் கூறும் செய்யுள் இன்பம் பயக் கின்றது. - ' கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில் கன்று (உ)றக்கும் குரவை கடைசியர் புன்ற லேப்புனம் காப்புடைப் போதரச் சென்றி சைக்கும் நுழைச்சியர் செவ்வழி. '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/79&oldid=863078" இலிருந்து மீள்விக்கப்பட்டது