பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக் கலை '65 மருத கிலத்தில் உழத்தியர் பாடும் குரவைப் பாட்டு முல்லேகில இடையர் இசைக்கும் குழலின் இசையோடு தழுவி அவர் முன்றிலில் கட்டப்பட்டிருக்கும் கன்றுகளைத் தூங்கச் செய்யும், நெய்தல் நிலத்து நுழைச்சியர் பாடு கின்ற செவ்வழி என்ற பண்ணில் பாடும் பாட்டைத் தினக் கொல்லையில் காவல் காக்கும் குறிஞ்சி நிலப்பெண் கேட்டு இனிய துயில் கொள்வாள். அதனல் தினப்புனக் காவல் அழிகின்றது; கதிர்களைக் கிளிகள் கொள்ளே கொள்கின்றன. பாடகர் இனிய மதுவை உண்டு தமது சிறிய யாழை இசைத்துத் தெள்விளி' என்னும் பண்ணேப் பாடிக் கொண்டு வைகறையில் தெரு வழியே செல்வார்கள். அப் பாடலே கோசல நாட்டு மகளிரைத் துயிலினின்று எழுப்பு வதாகும். " தெள்ளிச் சீறியாழ்ப் பாணர் தேன்பிழி நறவம் மாந்தி வள்விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல் வெள்ளிவெண் மாடத் தும்பர் வெயில்விரி பசும்பொன் - பள்ளி எள்ளரும் கருங்கண் தோகை இன்துயில் எழுப்பும் அன்றே - • . . " * மிதிலேக் காட்சிப் படலத்தைக் கூறப்போந்த கம்பர் இசையைப் பெருமைப்படுத்தற்கு இடம் கிடத்தமைக்கு மகிழ்ந்து தம் எண்ணத்தில் இருந்ததைத் தெள்ளிதில் தெரி வித்து விட்டார். இசை பயில் சாலைகளும் நாடக மேடை களும் மிதிலையில் உண்டு; நரம்புக் கருவிகளே மீட்டும் வகையும், பாடும் வகையும் பாடுவார் கவனிக்க வேண்டு வதையும் கம்பர் கீழ் வருமாறு கூறியுள்ளார்: 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/80&oldid=863082" இலிருந்து மீள்விக்கப்பட்டது