பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தமிழகக் கலைகள் "வள்ளுகிர்த் தளிர்க்கை நோவ மாடகம் பற்றி வார்ந்த கள்ளென நரம்பு வீக்கிக் கண்ணெடு மனமும் கூட்டித் தெள்ளிய முறுவல் தோன்ற விருந்தென மகளிர் ஈத்த - தெள்விளிப் பாணித் தீந்தேன் செவிமடுத் தினிதுசென்ருர்.' யாழின் நரம்புகளைத் தம் கூரிய நகங்கள் வாய்ந்த தளிர் போன்ற கைகள் கோகுமாறு வலித்துச் சுருதி சேர்த்து, தாம் பாடும் பாடலின் பொருளே மனத்தில் அநுபவித்து, அவ்வாறு அநுபவிப்பது அவர் கண்களில் தோன்றவும், இளநகை உண்டாயதால் பல்லொளி சிறிது விளங்கவும், 'தெள்விளி' என்னும் இசையில் அமைந்த பாட்டாகிய தேனே இராம லக்குமணருக்கும் கோசிகனுக்கும் விருங் தாகத் தந்தனர். அவர்கள் செவியார உண்டு இனிது போனர். சுருதி சேர்த்தல்-பாடும் பாட்டை உள்ளவாறு உணர்தல்-உணர்ந்ததை உருக்கமாய் அநுபவித்தல்அநுபவித்ததால் உண்டாகும் இன்பத்தைக் கண்களில் தோற்றுவித்தல்-இசை இன்பம் தோன்ற இளநகை அரும்புதல் ஆகிய இவை யனைத்தும் இசை பாடுவோரிடம் -தோன்ற வேண்டுவன என்பதைக் கம்பர் நமக்கு அறிவுறுத் துகின்ருர். கல்வெட்டுச் செய்திகள் சோழர் காலக் கல்வெட்டுக்கள் பல்லாயிரக்கணக் கானவை. அவை இசை பற்றிய செய்திகளே நமக்கு உணர்த்துகின்றன. பெரிய கோவில்களில் பாடல் மகளிரும் இருந்தனர். நாயன்மார் பாக்களையும் ஆழ்வார்களின் அருட் பாடல்களையும் கோவில்களில் பாட ஒதுவார்களும் பாடல் மகளிரும் இருந்தனர். யாழ் வாசித்து இப் பாடல்களைப் பாடும் பாணர்களும் சோழர் காலத்தில் இருந்தனர். சோழர் காலத்தில் நாடகக் கலே, கட்டடக் கலே, ஓவியக் கலை, சிற்பக் கலை, நடனக் கலை என்பவை உயர்ந்த முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/81&oldid=863084" இலிருந்து மீள்விக்கப்பட்டது