பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக் கலை 67 வளர்ச்சி பெற்றன. இராச ராச நாடகம், இராச ராசேசுவர நாடகம், பூம்புலியூர் நாடகம் முதலிய நாடகங்கள் நடிக் கப்பட்டன. ஒவ்வொரு பெரிய கோவிலிலும் சமயச் சார் பான பாடல்களுக் கேற்ப நடன மங்கையர் இருந்து நடித் தனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கடனத்திற் கும் நாடகத்திற்கும் இசை உயிர் நாடியாகும். எனவே, இசைக் கலை சோழர் காலத்தில் மிகவும் உயர்ந்திருத்தல் வேண்டும் என்பது எளிதில் துணியப்படும். பிற்காலத்தில் விசய நகர ஆட்சியில் கி. பி. 14-ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவரான மாலிக்-காபூர் தென்னாட்டின்மீது படையெடுத்தார். விந்த மலேக்குத் தென்பாற்பட்ட யாதவ அரசு, காகதிய அரசு, ஹொய்சல அரசு, பாண்டிய அரசு என்பவை அச்சேனைத் தலைவர் முன் தலே தாழ்ந்தன. தமிழகம் அவரது ப ை. யெடுப்பால் கிலே தளர்ந்தது. முசுலிம்களைத் தடுத்து நிறுத்தி இந்துக்களைக் காக்க வேண்டும் என்ற உணர்ச்சியுடன் பல்லாரி மாவட்டத்தில் விசய நகர அரசு ஏற்பட்டது. அந்த அரசர்கள் கன்னடத்தையும் தெலுங்கையும் வளர்த் தனர்; ஆந்திர இசையையும் கருநாடக இசையையும் வளர்த் தனர். நாளடைவில் இந்த இரண்டும் ஒன்ருகிக் கருநாடக இசை என்றே வளரலாயிற்று. துங்கபத்திரை ஆறு முதல் கன்னியாகுமரி வரை உள்ள நாடு விசயநகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது. விசய நகர வேந்தர்க்கு அடங்கிய நாயக்கராட்சி மதுரை யிலும் தஞ்சாவூரிலும் செஞ்சியிலும் ஏற்பட்டன. அதனல் ஆந்திரரும் கருநாடகரும் தமிழ் நாட்டு அரசாங்க அலுவல ராகத் தெற்கே குடியேறினர். இந்த மாறுதல்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/82&oldid=863086" இலிருந்து மீள்விக்கப்பட்டது