பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 - தமிழகக் கலைகள் தமிழகத்தில் கருநாடக இசை நுழைந்து பரவத் தொடங் கியது. இங்ங்ணம் ஏற்பட்ட ஆட்சி முறை மாறுபாட்டால் புதிய மன்னர்களை இன்புறுத்திப் பரிசு பெறத் தமிழிசை வாணர் கருநாடக இசையைக் கற்கலாயினர். இப் புதிய போக்கில்ை, தமிழகத்தில் வாழையடி வாழையாக இருந்து வந்த தமிழிசை சிறிது சிறிதாக மறைந்தது. காட்டில் தெலுங்குப் பாடல்கள் செல்வாக்குப் பெற்றன. பிற நாட்டு இசைகள் இசுலாம், கிறித்தவம் என்னும் இரண்டு புதிய சமயங்களின் நுழைவால் அச் சமயங்களைத் தழுவிய தமிழர் இந்துஸ்தானி இசையும் மேட்ைடு இசையும் கற்கலாயினர். கிறித்தவர் கோவில்களில் இன்றளவும் மேட்ைடு இசையே இருந்துவருகிறது. அந்த இசையில் தமிழ்ப் பாடல்களும் பாடப்படுகின்றன. இவ்வாறே முசுலிம்கள் இக்துஸ்தானி இசையை விரும்பிக் கற்கின் றனர். - - இருபதாம் நூற்ருண்டில் - - ஆங்கில ஆட்சியில் பேன்டு (Band) இசை தமிழகத் தில் பரவியது. இன்றும் பல திருமணங்களில் அவ் விசையை நாம் கேட்கிருேம். நம் நாட்டு நாதஸ்வரம் அழியாது இருந்துவருகிறது. பண்டைக் காலப் பறை, சங்கு, உடுக்கை, தாளம், கொம்பு முதலிய இசைக் கருவிகள் சிற்றுார்களில் கிலேத்து இருந்து வருகின்றன. ஏற்றம் இறைக்கும் பொழுதும், காற்று கடும்பொழுதும், கனமான பொருளே இழுத்துச் செல்லும் பொழுதும், நெடுந்து ரம் வண்டிகளே ஒட்டிச் செல்லும் பொழுதும், சுண்ணும்பு இடிக்கும் பொழுதும் அவ்வத்தொழிலில் ஈடு பட்ட ஆண்களும் பெண்களும் பாக்களைப் பாடுகிருர்கள். இவ்வாறு பாடும் பழக்கம் சங்ககாலம் முதலே இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/83&oldid=863088" இலிருந்து மீள்விக்கப்பட்டது