பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக் கலை 69 வரும் பழக்கமாகும் என்பதை முன்னரே கண்டோம். குழந்தையை உறங்க வைக்கும் காலாட்டுப் பாடலும் பழமையானது. • ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன் வரையில் தமிழகத்து இன்னிசை அரங்குகளில் தெலுங்குப் பாடல் களே ஆட்சி புரிந்து வந்தன. தமிழ் மக்கள் நடுவில் தமிழ் இசைவாணர் தெலுங்குப் பாடல்களேயே பாடி வந்தனர். ஒவ்வோர் இசையரங்கின் இறுதியில் மட்டும் இரண்டொரு தமிழ்ப் பாடல்களேப் பாடிவந்தனர். தமிழ்ப் பற்றுடைய கம் மக்கள் இவ் வெட்கக் கேடான நிலைமையைக் கண்டு மனம் வருந்தினர்; செய்வகை தோன்ருது விழித்தனர். அந்த நிலையில் செட்டி நாட்டரசர் இராசா சர். அண்ணுமலைச் செட்டியார் தமிழிசையை வளர்க்க முற்பட் டார். அவருக்கு உதவியாக டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியாரும், சர். எம். ஏ. முத்தையா செப்டியாரும் நல்லறிஞர் பலரும் இருந்தனர். இவர் தம் முயற்சியால் தமிழகத்துப் பேரூர்களில் தமிழிசைச் சங்கங்கள் தோன்றின. தலைமைச் சங்கம் சென்னையில் நிறுவப்பட்டது. பலர் தொடக்கத்தில் தமிழிசை இயக்கத்தை எதிர்த்தனர். அரசரும் பிறரும் மனம் தளராது தமிழிசையை வளர்க்கத் தொடங்கவே, முதலில் தோன்றிய எதிர்ப்பு மறைந்தது. அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பாடல்கள் பல நூல்கள் வடிவில் வெளிவந்தன-இன்றும் வந்து கொண்டிருக்கின் றன. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் இறுதியில் சென்னையில் தமிழிசை மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழிசை வாணர் குழுவில் தமிழ்ப் பண்கள் ஆராயப்பட்டு வருகின்றன. பேராசிரியர் சாம்பமூர்த்தி, சித்துர் சுப்பிரமணிய பிள்ளை, தண்டபாணி தேசிகர் முதலிய இசைவாணர்கள் இவ்வாராய்ச்சியில் ஊக்கம் காட்டி வருகின்றனர். சங்க நூல்களே நன்கு ஆராய்ந்து பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/84&oldid=863090" இலிருந்து மீள்விக்கப்பட்டது