பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழகக் கலைகள் யாழ்கள்ேப் பற்றிய விவரங்களே விபுலானந்த அடிகள் “யாழ் நூல்' என்னும் பெயரில் எழுதியுள்ளார். தமிழிசை பொது மக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டதால், தெலுங்குப் பாடல்களையே பாடிக்கொண்டிருந்த இசை வாணரும் இப்பொழுது தமிழ்ப் பாடல்களைப் பாடி வருகின்றனர். நாடகமும் படக்காட்சியும் தமிழ் மக்கள் நாடகக் கலையின் உயர்வை இப் பொழுது உணர்ந்துவருகின்றனர். சமயம், வரலாறு, சீர்திருத்தம் இவற்றைத் தழுவிய நாடகங்கள் இன்று நடிக்கப் பெறுகின்றன. டி. கே. எஸ். சகோதரர்கள், சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், கே. ஆர். இராமசாமி, எஸ். எஸ். இராஜேந்திரன், தங்கவேலு, தேவி நாடக சபையார், நவாப் இராசமாணிக்கம் முதலிய நாடகக் கலைஞர்களேத் தொடர்ந்து பலரும் பலவகை நாடகங்களை நடித்துக் காட்டுகின்றனர். இவற்றிலெல்லாம் தமிழிசை முழக்கமிடுகிறது. . தமிழ்ப் படக் காட்சிகள் மிகச் சிறந்த முறையில் இசைக்கலையை வளர்த்து வருகின்றன. காலத்திற்கேற்ற கருத்தமைந்த பாட்டுகள் படக்காட்சியுள் இடம் பெற்றுள்ளமை கேட்டு மகிழ்தற்குரியது. கட்சிப் பாடல்கள் இன்றைய தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளும் சமுதாய நலக் கட்சிகளும் தத்தம் கொள்கைகளுக்கேற்ற பாடல்களை இயற்றிக் கட்சிக் கூட்டங்களில் பாடுகின்றன; அப் பாடல்கள் வாயிலாகத் தம் கொள்கைகளைப் பொது மக்களிடையே பரப்புகின்றன. பாரதியார் பாக்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/85&oldid=863092" இலிருந்து மீள்விக்கப்பட்டது