பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக் கலை 7 : தெருக்களில் பாடியது, காங்கிரஸ் கட்சி மிக்க செல்வாக்குப் பெற்றமைக்கு ஒரு காரணமாகும். வானெலியில் தமிழிசை பொதுவாகச் சென்னை வானொலி நிலையத்திலும், சிறப்பாகத் திருச்சி வானெலி கிலேயத்திலும் தமிழ்ப் பாடல்கள் நாள்தோறும் பாடப்பெற்று வருகின்றன. தமிழிசையிலும் கருநாடக இசையிலும் மேட்ைடு இசை யிலும் அரபு நாட்டு இசையிலும் தமிழ்ப்பாக்கள் உருவாகிக் கொண்டே வருகின்றன. இந்த வளர்ச்சி வரவேற்கத் தககது. - முடிவுரை ஒரு காட்டில் வேற்றரசர் ஆட்சியால் பல துறைகளி லும் மாறுதல் ஏற்படுதல் இயற்கை. தமிழகத்திலும் பிற துறைகள் போலவே இசைத்துறையிலும் இம் மாறுதல் கள் ஏற்பட்டன. முதலில் இருந்தது தமிழிசை, பிறகு வடமொழியாளர் இசை தமிழில் கலந்தது. பின்பு விசயநகர ஆட்சியின் விளைவால் கருங்ாடக இசை கால் கொண்டது. முசுலிம்கள் ஆட்சியால் இந்துஸ்தானி இசை நுழைந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியால் மேட்ைடு இசை முறை தமிழகத்தில் பரவியது. ஆட்சி மாறுபட்டால் சமுதாயத் துறை பல்வற்றிலும் மாறுபாடு கள் ஏற்படுவது போலவே கலேத் துறையிலும் மாறுபாடு கள் ஏற்ப்டுதல் இயற்கையே அன்ருே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/86&oldid=863094" இலிருந்து மீள்விக்கப்பட்டது