7. நடனக் கலை கூத்தின் தோற்றம் இறைவனது அருட்படைப்பிலே கூத்து நிகழ்கின்றது. எவரிடமும் பயிற்சி பெருமலும், கூத்துக் கலையின் பண்பைச் சிறிதளவும் கல்லாமலும், கரு முகில்களைக் காணும் மயில்கள் தம் சிறகுகளே விரித்து ஆடுகின்றன. கொடிய அரவங்கள் மகுடி ஓசையைக் கேட்டதும் தம் புற்றுக்களிலிருந்து வெளிப்போந்து இசையில் ஈடுபட்டு மெய்மறந்து படமெடுத்து ஆடுகின்றன. கண்ணனைப் போன்ருரது வேய்ங் குழலில் ஈடுபட்டுக் கன்று காலிகள் தம்மை மறந்தனவாய் அசைந்தாடுகின்றன. இவற்றைக் கூர்ந்து நோக்கின், இயற்கைப் படைப்பிலேயே கூத்து இயல்பாக அமைந்துள்ள உண்மையை உணரலாம் அன்ருே? - - மலே முழைகளில் வாழ்ந்த பண்டை மக்கள் முதற் கண் பலவாருக ஒசைகளேயிட்டு ஒருவருக்கொருவர் தம் எண்ணங்களே அறிவித்துக்கொண்டனர். பின்னர் அம் மக்கள் சைகைகள் சேர்த்துத் தம் கருத்துக்களே வெளிப் படுத்தினர்; பின்னர்ப் படிப்படியாகத் தங்கட்கென மொழியை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு ஒவ் வொரு நாட்டுப் பண்டை மக்களும் தங்கட்கெனத் தனித் தனி மொழியை அமைத்துக்கொண்டனர். மனிதன் பலவகை உணர்ச்சிகள் கொண்டவன்; அளவு கடந்த மகிழ்ச்சி உண்டாகும் பொழுது அவன் தன்னை மறந்து கூத்தாடுவான்; கோபமாயிருக்கும் பொழுது கண் சிவந்து உகடுகள் துடிக்கப் பரபரப்புடன் பேசுவான். இங்ங்னம்
பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/87
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை