பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடனக் கலை. - 73 மனிதன் ஒவ்வோர் உள்ள நிலையில் ஒன்றை வெளிப்படை யாகக் காட்டுதல் அல்லது செய்தல் இயல்பு. மனிதன் மகிழ்ச்சி நிலையில் தன் விருப்பப்படி பல வகை ஓசைகளை எழுப்ப-அவ்வோசைகள், சில சமயங் களில் அவனேயறியாது அவனுக்கு இன்பத்தை அளிக்கஅவன் மீண்டும் மீண்டும் அவ்வோசைகளே எழுப்பி அதுப விக்க்-இவ்வாறு எழுப்பப்பட்ட ஒலிகளின் சேர்க்கை காதுக்கு இன்பமளித்த நிலையில், அவனைப் பின்பற்றிப் பிறர் அத்துறையில் இறங்கியிருக்கலாம். மனிதன் தன் கூத்துக்கேற்ப ஒலிகளே எழுப்பி யும், கைகளேக் கொட்டியுமிருக்கலாம். அவன் இங்ங்னம் குதித்தது கூத்தாகவும், ஒலிகளே எழுப்பி ஒசையிட்டது இசையாகவும், கைகளேக் கொட்டியது தாளமாகவும் மாறியிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்வாறு பிறந்திருக்கலாம் என்று கருதுகின்ற இசை, கூத்து, தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்த தொகுப்பே கூத்து அல்லது கடனம் என்பது. . -- இந்தியாவுக்கு வெளியே - மிகப் பழைய எகிப்திய-சுமேரிய-பாபிலோனிய நாகரீகச் சின்னங்களில் பல வகை நடனங்களே உணர்த்தும் ஒவியங்கள் காணப்படுகின்றன. அதல்ை அப்பண்டை நாகரிகங்களில் திள்ைத்த மக்கள் கூத்துக் கலையில் பண்பட் டிருந்தனர் என்பது தெரிகிறது. இந்தியாவில் இந்தியாவில் வேதகாலத்திற்கு முற்பட்ட சிந்துவெளி காகரிகத்தை உணர்த்தும் புதை பொருள்களில் வெண். கலத்தாற் செய்யப்பட்ட கடனமாதின் வடிவம் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/88&oldid=863099" இலிருந்து மீள்விக்கப்பட்டது