பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. . தமிழகக் கலைகள் கிடைத்துள்ளது. சில கற்சிலைகள் நடன முறையில் காணப்படுகின்றன. தவுலக் கழுத்தில் மாட்டித் கொங்க விட்ட மனித வுருவம் (களிமண்ணிற் செய்யப்பட்டது) கிடைத்துள்ளது. மிருதங்கம், வீணே, தாளம் இவற்றைக் குறிக்கும் ஒவியங்கள் அகப்பட்டுள்ளன. இவற்றைச் சேர்த்து நோக்கும்பொழுது, சிந்துவெளி மக்கள் கடனக் கலையில் அறிவுடையவராக இருந்தனர் என்பது வெளி யாகிறதன்ருே? வட இந்தியாவில் நடனத்தைப் பற்றி எழுந்த முதல் வடமொழி நூல் பரதம் என்பது. இதனைச் செய்தவர் பரத முனிவர். அது கி. மு. மூன்ரும் நூற்ருண்டினது என்று அறிஞர் அறைகின்றனர். இஃது இன்றளவும் மிகச் சிறந்த நூலாக இருந்து வருகின்றது. இத்தகைய சிறந்த நூல் க. மு. 8-ஆம் நூற்ருண்டினது எனின், அதறகு முன்னரே வட இந்தியாவில் நடனக்கலே மிக உயர்ந்த கிலையை அடைந்திருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகிறதன்ருே? "நடனக் கலை, அறம்-பொருள்-இன்பம்-வீடு என்னும் காற்பேறுகளையும் நல்க வல்லது; மனவுறுதி, உடல்வளம், இன்ப உணர்ச்சி முதலிய கறபண்புகளே அளிக்க வல்லது. இக்கலே தரும் இன்பம் தவத்தினர் அடையும் இன்பத்திற்கு இணேயானது' என்பது பரதத்திற் கூறப்படும் செய்தி ய்ாகும். பரதம் தோன்றிய பின்னர் எழுந்த வடநாட்டு ஓவியங் களிலும், சிற்பங்களிலும், இலக்கியங்களிலும் நடனக்கலை நன்கு காட்டப்பட்டுள்ளது. குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் எழுந்த அயலார் படையெடுப்புக்களாலும் குழப்பங்க ளாலும் வட இந்தியாவில் இக்கலே நன்கு வளர இட மற்றது. ஆயின், விந்தமலேக்கு தென்பாற்பட்ட நாடு களில் இக்கலே நன்னிலையில் வளர்ச்சி பெறலாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/89&oldid=863101" இலிருந்து மீள்விக்கப்பட்டது