பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடனக் கல 7 5. சங்ககாலத்தில் கூத்துக்கலே இன்றுள்ள சங்க நூல்களில் தொல்காப்பியம் பழைய தென்பதைப் பெரும்பாலோர் ஒப்புகின்றனர். அதன் குறைந்த காலம் ஏறத்தாழக் கி. மு. 300 என்னல் தவருகாது. இப்பழைய நூலில் பழந்தமிழ் மக்களிடம் இருந்துவந்த கூத்து வகைகள் சில குறிக்கப்பட்டுள்ளன. அவை (1) வேலன் ஆடும் (காந்தள்) வெறிக்கூத்து, (3) வென்றவீரர் தம் அடையாளப் பூச்சூட்டி ஆடும் கருங்கூத்து, (3) வெற்றியைப் பாராட்டிப் பெண்கள் ஆடும் வள்ளிக்கூத்து, (4) களத்தை விட்டு ஓடாத இளைய வீரனுக்குக் காவில் கழலைக்கட்டி இருபாலரும் ஆடும் கழனிலைக்கூத்து முதலியன ஆகும். இவை பெரும்பாலும் போர்த்தொடர்பானவை. இவையன்றி ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி முதலிய வகைகளும் இருந்தன. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் முதலிய கானிலங் களிலும் அவ்வங் கிலத்திற்குரிய கூத்தர் இருந்து வந்தனர், கூத்துக்கள் நடைபெற்று வந்தன என்பதைச் சங்க நூல் களால் நாம் அறியலாம். குறிஞ்சி கிலத்தில் குறப் பெண்கள் தங்கள் குறிஞ்சி கிலக் கிழவனகிய முருகப் பெருமானே வழிபட்டு ஆடும் கூத்து,குன்றக் குரவை அல்லது குரவை எனப்படும். இதுவே முல்லைநில மகளிரால் மாயோசீனத் துதித்து ஆடப்படுமாயின், ஆய்ச்சியர் குரவை, எனப் பெயர் பெறும். குரவை என்பது எழுவர் மங்கையர் செங்கிலே மண்டலக் கடகக் கைகோத்து அங்கிலக்கொப்ப கின்று ஆடும் கூத்தாகும்." குரவையாடுதல் இரு பாலருக்கும் உரியது. குறவர் தொண்டகப்பறை கொட்டக் குரவை யாடுவர். அது காணும் மகளிரும் மேற் சொன்ன இலக்கணப் படி கின்று ஆடுவர். அங்ங்ணம் ஆடும்போது அவர்கள் பாடிக்கொண்டே ஆடுவர். இதன் விவரங்களைத் தொகை. நூல்களிலும் சிலப்பதிகாரத்திலும் விரிவாகக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/90&oldid=863105" இலிருந்து மீள்விக்கப்பட்டது