பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-T6 தமிழகக் கலைகள் துணங்கை என்பது கூத்து வகைகளுள் ஒன்று. அது முடங்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றி அடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து. மகளிர் விழாக்காலங்களில் துணங்கைக் கூத்தாடுவர். ஆடவர் அம்மகளிர்க்கு முதற்கை கொடுத்தல் வழக்கம். நானிலங்களிலும் இருந்த வள்ளல்கள்பாற் சென்று உள்ளக் குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடிய நடனமங்கை பண்டைத் தமிழகத்தில் விறலி எனப் பெற்ருள். இவ் விறலியர் பாணருடனும் கூத்தருடனும் சென்று வள்ளல் களிடம் பரிசு பெற்று வந்தனர். அவர்கள் பெரும்பாலும் பாணருடன் செல்வது வழக்கம். விறலி ஆடு மகள்' என்று பெயர் பெற்ருள்." - இங்ங்னம் மெய்ப்பாடுகள் தோன்ற நடிக்கும் விறலியர் சங்ககாலத்தில் பலர் இருந்தனர் என்பதைத் தொகைநூற் களால் அறியலாம். பண்டை அரசர்கள் விறலியர் ஆடல் பாடல்களைப் பாராட்டிப் பொன்னரி மாலையைப் பரிசளித் தனர்; தொடி முதலிய சிறந்த நகைகளையும் வழங்கினர்." விறலியர் நிறமுடைய கலவை பூசப்பட்ட வளைந்த சந்தினையுடைய முன்கைகளையும் ஒளி பொருந்திய நெற்றி யையும் உடையவர் என்று கோவூர்கிழார் பாராட்டி புள்ளார். விறலியர், யாழ் வாசித்தாற் போலப் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய விறல்பட ஆடுதலை யுடையார்' என்று மாங்குடி மருதருைம் பெருங்கவுசிகருைம் கூறல், விறலியருடைய இசைச் சிறப்பினேயும் நடனப் பயிற்சியின் மேன்மையினையும் நன்கு உணர்த்துவதாகும்." சோழன் நலங்கிள்ளி (இத்தகைய) விறலியர்க்கு மாட 1. குறுந்தொகை, 105. 2. புறம்-364, 105. 3. மதுரைக் காஞ்சி, வரி 210-18, உரை; மலைபடுகடாம், வரி. 534-6, நச். உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/91&oldid=863107" இலிருந்து மீள்விக்கப்பட்டது