பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடனக் கலை 77° மதுரையையோ வஞ்சிமா நகரத்தையோ வேண்டுமாயின் தரவல்லவன்' என்று கோவூர்கிழார் கூறியுள்ளதிலிருந்து, விறலியர் பண்டை அரசர்பால் பெற்றிருந்த பெருஞ்சிறப் பினேக் காணலாம்.' விறலி கூத்தி, ஆடுமகள், ஆடுகள மகள் எனவும் நூல்களிற் குறிக்கப்பட்டாள். அங்ங்னமே நடனமாடுபவன் கூத்தன், ஆடுமகன், ஆடுகளமகன் எனப் பட்டான். இவர்கள் சங்க காலத்திற் கூத்துக்கலையை வளர்த்த கலைவாணர் ஆவர். இவர்கள் கடனமாடிய அரங்கம் ஆடுகளம் எனப்பட்டது. விழாக்காலங்களில் இவர்கள் பலவகைக் கூத்துக்களே ஆடினர்கள்; பிற காலங் களில் அரசர் முதலிய வள்ளியோற் பாற் சென்று, பாடி ஆடிப் பரிசில் பெற்று மீண்டார்கள். இவர்களது கலையை உணர்த்தும் நூலே கூத்த நூல் என்பது. - சிலப்பதிகாரத்தில் சிலப்பதிகாரத்தில் கூத்து என்பது நாடகம் என்னும் பெயருடன் வழங்கப் பெற்றுள்ளது. 'நாடக மகளிர்' என்னும் தொடர் நடன மகளிர், கூத்த மகளிர், விறலியர் என்னும் பெயர்களின் பொருளேயே அளிப்பதாகும். மாதவி நாடக மங்கை (விறலி); அவள் ஆடிய களம் நாடக அரங்கு எனப்பெயர் பெற்றது. இப்பெயர்கள் வடவர் நுழைவிளுல் உண்டான பெயர் மாற்றங்கள் என்னலாம். சிலப்பதி காரத்தில் நடனக் கலையைப் பற்றிய பல விவரங்கள் அரங்கேற்று காதையில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. நடன மகள் சிறப்பாகக் கூத்து, பாட்டு, அழகு இம் மூன்றிலும் நிறைவு பெற்றவளாக இருத்தல் வேண்டும். அவள் ? வயது முதல் 12 வயது வரை (ஏறத்தாழ ஆருண்டுகள்) கூத்துக் கலையிற் பயிற்சி பெறுதல் 4. புறம்-32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/92&oldid=863109" இலிருந்து மீள்விக்கப்பட்டது