பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 தமிழகக் கலைகள் வேண்டும். நடனமக்களைப் பயிற்றுவிக்கும் ஆடல் ஆசிரியன் இருவகைக் கூத்துக்களில் வல்லவகை இருத்தல் வேண்டும். இருவகைக் கூத்தாவன: வசைக் கூத்து-புக்ழ்க் கூத்து; வேத்தியல்-பொதுவியல்; வரிக்க. த்து-வரிச் சாந்திக் கூத்து; சாந்திக் கூத்து-விநோதக் கூத்து; ஆரியம் -தமிழ், இயல்புக் கூத்து-தேசிகக்கூத்து எனப் பலவகை. இவை விரிந்த நூல்களிற் காண்க எனவரும் அடியார்க்கு நல்லார் உரை காணத்தக்கது. சாந்திக் கூத்து என்பது தலைவன் இன்பமேந்தி கின்று ஆடிய கூத்து. அது (1) சொக்கம், (3) மெய், (3) அபிநயம், (4) நாடகம் என கால்வகைப் படும். இவற்றுள் (1) சொக்கம் என்பது தூய கடனம். அது 108 கரணமுடையது; (3) மெய்க்கூத்து என்பது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். இவை y மெய்த்தொழிற் கூத்தாகலின் மெய்க்கூத்தாயின. இவை அகச்சுவை பற்றி எழுதலின் ‘அகமார்க்கம்' எனப்படும்; (3) அபிநயக்கூத்து என்பது, கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைக்காட்டி வல்லபம் செய்யும் பலவகைக் கூத்து, (4) நாடகம் என்பது கதை தழுவி வரும் கூத்து'... எனவரும் அடியார்க்கு கல்லார் உரையும் அவர் மேலும் அரங்கேற்று காதையில் தரும் பலவிபரங்களும் ஊன்றிப் படித்து உணரற் பாலன. அவை சிலப்பதிகார காலத்தில் இருந்த கூத்துக் கலையின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்தும் செய்திகளாகும். $x வீரம், அச்சம், இழிவு, வியப்பு, இன்பம், துன்பம், நகை, நடுவுகிலே, வெகுளி என்னும் ஒன்பது சுவைகள் நடிப்புக்குரியவை. நடிப்பவர் இவற்றை நன்கு புலப் படுத்தி நடிக்க வேண்டும். சோம்பலுக்கு உரிய நடிப்பு, பெருமைக்குரிய நடிப்பு, வெட்கத்திற்குரிய நடிப்பு, மழையில் கனேவதற்கு உரிய நடிப்பு, பனியில் தலைப் 5. சிலப்பதிகாரம், காதை 3, உரை, பக். 83.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/93&oldid=863111" இலிருந்து மீள்விக்கப்பட்டது