பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடனக் கலை 79 படுவதற்குரிய நடிப்பு, வெயிலில் செல்வதற்கு உரிய நடிப்பு என்று நடிப்பு 34 வகையாகப் பகுத்துக் காட்டப் பட்டுள்ளது. ஒவ்வொரு வகைக்கும் இலக்கணம் உண்டு." கை நடிப்புகளில் ஒரு கையில்ை நடித்துக் காட்டுதல், இரு கைகளில்ை நடித்துக் காட்டுதல் என்னும் பிரிவுகள் உண்டு. ஒரு கையில்ை நடித்துக் காட்டும் நடிப்புகள் 88 வகைப்படும். அவை பதாகை, இளம்பிறை, விற்பிடி, குடங்கை, வலம்புரி எனத் தனித்தனிப் பெயர்கள் பெற்றுள்ளன. இந்த நடிப்புகளில் கைவிரல்கள் முடங் குதல், நிமிர்தல், குனிதல், விரிதல், தொடுதல், விடுதல் முறைகளில் இயக்கிக் காட்டப்படும். இரண்டு கைகளால் நடித்துக் காட்டும் நடிப்புகள் 15 வகைப்படும். அவை அஞ்சலி, புட்பாஞ்சலி, அபய அத்தம், மகரம் எனப் பல பெயர்களைப் பெற்றுள்ளன.9 - நடன மகளே அக்கலையில் தயாரிக்கும் ஆடல் ஆசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, தண்ணுமை ஆசிரியன் அமைதி, குழலோன் அமைதி, யாழாசிரியன் அமைதி என்பன யாவை என்பதைச் சிலப்பதிகாரம்-அரங்கேற்று காதையில் தெளிவுறக் காணலாம். இன்னின்னவற்றில் முழுப் பயிற்சி பெற்றவரே இன்னின்ன ஆசிரியர் என இளங்கோவடிகள் கூறுதலேக் காண் அவர் காலத்தில் தமி ழகத்தில் இசையும் கூத்தும் மிகவுயரிய கிலேயில் சீரும் சிறப்பும் பெற்றிருந்தன என்பது வெள்ளிடை மலேபோல் விளக்கமாகும். ஆடற்குரிய அரங்கு எங்ங்னம் அமைக் கப்படல் வேண்டும் என்பது இந்நூலுள் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது; அரங்கிற் புகுந்து ஆடும் இயல்பும் விவரிக்கப் பட்டுள்ளது. 6. சிலப்பதிகாரம் பக். 85-87. 7. டிெ, பக். 92-96. 8. டிெ, பக், 97-98.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/94&oldid=863113" இலிருந்து மீள்விக்கப்பட்டது