பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - தமிழகக் கலைகள் அரங்கினிற் புகுந்து மாதவி பாடினுள். ஆடினுள்; அப்பொழுது மேற்சொன்ன பலவகை ஆசிரியர்கள் இருந்து தத்தம் தொழில் செய்தனர். அவ்வமையம், ' குழல்வழி நின்றது யாழே; யாழ்வழித் தண்ணுமை கின்றது தகவே, தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைந்த தாமங் திரிகை... ... யாமந் திரிகையோ டக்தர மின்றிக் கொட்டிரண் டுடையதோர் மண்டில மாகக் கட்டிய மண்டலம் பதினென்று போக்கி வந்த முறையின் வழிமுறை வழாமல்......' மாதவி ஆடினுள். இக் கருத்துடன், - " நெய்திரள் நரம்பில் தந்த மழலையின் இயன்ற பாடல் தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்கக் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல ஐயநுண் இடையார் ஆடும் நாடக அரங்கு கண்டார்." என வரும் (கி. பி. 13-ஆம் நூற்ருண்டிற் பாடப்பட்ட) கம்பராமாயணச் செய்யுளின் கருத்து ஒன்றுபடல் காண்க. w மாதவி ஆடிய பதினெராடல் 1. சிவபெருமான் விட்ட அம்பில்ை அவுணர் வெந்து வீழ்ந்தனர். அவ்விடத்தில் வெண்பனிக் குவையாகிய பாரதி யரங்கத்திலே உமையவள் ஒரு கூற்றினளாய் கின்று ஆடிய கொடு கொட்டி ஆடல். . . . . - 3. வானேராகிய தேசில் நான்மறைக் கடும்ப பூட்டி நெடும்புறம் மறைத்து, வார்துகில் முடித்துக் கூர்முள் பிடித்துத் தேர்முன் கின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாகிய இறைவன் வெண்ணிற்றை அணிந்தாடிய பாண்டரங்கக் கூத்து. . . . . . . . . . . 9. அரங்கேற்று காதை, வரி 139-146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/95&oldid=863115" இலிருந்து மீள்விக்கப்பட்டது