பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடனக் கலை 81 3. கண்ணன் ஆடிய ஆடல் பத்துள் கஞ்சன் வஞ்சனேயால் வந்த யானையின் கோட்டை ஒடிப்பதற்கு கின்ருடிய அல்லியத் தொகுதி என்னும் கூத்து. 4. வாணகிைய அவுணனே வெல்லற்கு அவனை அறைகூவி அழைத்து அவனைச் சேர்ந்த அளவில் உயிர் போக கெரித்துத் தொலைத்த மல்லாடல். 5. கடலின் நடுவு கின்ற சூரனது வேற்றுருவாகிய வஞ்சத்தை யறிந்து அவன் போரைக் கடந்த முருகன் அக்கடல் நடுவே திரையே (அலேயே) அரங்கமாக கின்று துடிகொட்டி யாடிய துடிக்கூத்து. .ே அவுணர் தாம் போர் செய்தற்கு எடுத்த படைக் கலங்களைப் போரிற்கு ஆற்ருது போட்டு வருத்தமுற்ற அளவிலே முருகன் தன் குடையை முன்னே சாய்த்து கின்ரு டிய குடைக் கூத்து. 7. காமன் மகன் அகிருத்தனத் தன் மகள் உழை காரணமாக வாணன் சிறை வைத்தலின், அவனுடைய 'சோ' என்னும் நகர வீதியிற் சென்று கண்ணன் குடங் கொண்டாடிய குடக் கூத்து. - : 8. ஆண்மைத் தன்மை திரிந்த பெண்மைக் கோலத் தோடு காமன் ஆடிய பேடி என்னும் ஆடல். 9. மாயோனே உண்மைப் போரால் வெல்லல் ஆற்ருத அவுணர் பாம்பு, தேள் முதலியன வாய்ப்புகுதலை உணர்ந்து அவன் அவற்றை உழக்கிக் களைதற்கு மரக்கால் கொண்டு ஆடிய மரக்காலாடல். Ö

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/96&oldid=863117" இலிருந்து மீள்விக்கப்பட்டது