82 தமிழகக் கலைகள் 10. அவுணர் போர்க் கோலத்திலிருக்கும் பொழுது தன்னைக் கண்டு மோகித்து விழும்படி கொல்லிப்பாவை வடிவாய்ச் செய்யோளாகிய திருமகளால் ஆடப்பட்ட பாவை என்னும் ஆடல். 11. வாணனுடைய பெரிய நகரில் வடக்கு வாயிலில் உள்ள வயலிடத்தே கின்று அயிராணி என்பவள் ஆடிய கடையம் என்னும் ஆடல்." மேற்சொன்ன கூத்து வகைகளுள் சாக்கைக் கூத்து என்பது ஒன்று. சாக்கையன் என்பவன் கூத்து நிகழ்த் தும் மரபினன். அவல்ை ஆடப்படும் கூத்து சாக்கைக் கூத்து' எனப் பெயர் பெற்றது. சாக்கையன் ஒருவன் சேரன்-செங்குட்டுவனுக்கு முன் சிவபெருமான் ஆடிய 'கொட்டிச் சேதம் என்னும் கூத்தை ஆடினன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இச்சாக்கைக் கூத்தர் தமிழ கத்தில் பிற்பட்ட நூற்ருண்டுகளிலும் இருந்து வந்தனர் என்பது சோழர்காலக் கல்வெட்டுக்களால் அறியப்படு கிறது. .امید . - --- சங்க காலத்தில் இருந்த கூத்த நூல்கள் மேற்சொல்லப்பட்ட பல்வகைக் கூத்து வகைகளை யும், விறலியர்-கூத்தர் முதலியவர் இருந்தமையையும் நோக்கச் சங்ககாலத்தில் கூத்த நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது வெள்ளிடைமலை. ஆயின் அந்நூற் பெயர்களே உள்ளவாறு அறியச் சான்றில்லை. கி.பி. 14-ஆம் நூற்ருண்டினரும் சிலப்பதிகாரத்திற்கு உரை வகுத்த வருமான அடியார்க்கு நல்லார், தமக்குப் பல நூற்ருண்டு. கட்கு முன் பாடப்பட்ட சிலப்பதிகாரத்திற்கு உரை 10. மா. ரா. இளங்கோவன், கலையும் - • பக் 106.107. ன, கலையும வாழவும். 11. காதை 28, வரி 65,79.
பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/97
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/page97-702px-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf.jpg)