பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடனக் கலை 83 காண்கையில் சில கூத்த நூற் பெயர்களைக் குறிக் கின்ருர். அவற்றுள் பல சிலப்பதிகார காலத்தில் இருந்தன. என்று கொள்வதைவிட, அடியார்க்கு கல்லார் காலத்தில் இருந்தன- அவர் அவற்றை நன்கு படித்தறிந்தவர் எனக் கோடலே பொருத்தமுடையதாகும். அவர் குறிக்கும் கூத்த நூல்களாவன: - - (1) பரதம், (3) அகத்தியம், (3) முறுவல், (4) சயந்தம், (5) குணநூல், (6) செயிற்றியம், (?) இசை நுணுக்கம், (3) இந்திரகாளியம், (9) பஞ்ச மரபு, (10) பரத சேபைதீயம், (11) மதிவாணனர் காடகத் தமிழ் நூல், (18) கூத்தநூல். இவற்றுள் முதல் இரண்டு நூல்கள் அடியார்க்கு கல்லார் காலத்திலேயே இறந்தன என்பது குறிக்கப் பட்டுள்ளது. பிறநூல்களிலிருந்து இரண்டொரு குத் திரங்கள் அடியார்க்கு நல்லார், பேராசிரியர் முதலி யோரால் ஆளப்பட்டுள்ளன. இந்நூல்களுள் ஒன்றேனும் இக்காலத்தில் கிடைத்திலது. W பல்லவர் காலம் சிற்பச் சான்றுகள் இங்ங்னம் சங்க காலத்திற் சிறப்புற்றிருந்த கூத்தக் கலை, பல்லவர் காலத்தில் வளர்ச்சி பெற்ற தென்று கூறலில் தடையில்லே. முதலாம் மகேந்திரன் கலை இன்பன். அவன் கூத்தக் கலையிலும் பெரிதும் ஈடுபாடுடையவன் என்பதை உறுதிப்படுத்தச் சித்தன்னவாசல் நடன மாதர் ஒவியங்களே ஏற்ற சான்ருகும். அவன் இயற்றிய மத்த விலாசப் பிரகசனம் என்னும் வேடிக்கை நாடக நூலில், 'சிவனர் ஆடிய தாண்டவ நடனம் மூவுலகங்களையும் ஒருமைப்படுத்த வல்லது' என்று பாராட்டியுள்ளான். இராசசிம்மன் நடனக் கலையில் மிக்க ஈடுபாடு கொண்டவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/98&oldid=863120" இலிருந்து மீள்விக்கப்பட்டது