பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழகக் கலைகள் அவன் தான் கட்டுவித்த கயிலாசநாதர் கோவிலில் சிவளுர் ஆடிய பதாகை கடனம், லதாவிருசிக கடனம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் முதலிய நடன வகை கக்ளச் சிற்ப அமைப்பிற் காட்டி அழியாப் புகழ் பெற்றன். பலவகை நடிகையர் உருவங்களும் அக் கோவிலில் செதுக்கப்பட்டுள்ளன. காஞ்சி வைகுக்தப் பெருமாள் கோவிலில் கூத்தன், கூத்தியர் உருவங்கள் இரு சிற்பங்களில் செதுக்கப்பட் டுள்ளன. ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து ஆடிய கூத்து வகைகளும் அக்காலத்தில் இருந்தன என்பதற்கு அச் சிற்பங்கள் சான்ருகும். - இலக்கியச் சான்று பல்லவர் காலத்தில் எழுந்த சைவத் திருமுறைகளில் இறைவனடிய பலவகைக் கூத்துக்கள் இடம் பெற். ஆறுள்ளன. நடன மாதர் பாடல் பெற்ற சிறந்த கோவில் களில் இருன்து நடனக் கலேயை வளர்த்து வந்தனர் என் பதைத் திருப்பதிகங்களிற் காணலாம்: - - " தேனர் மொழியார் திளைத்தங் காடித் திகழும் குடமுக்கில்' ' வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி அல்மந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே' தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்பவர் உறையும் புகார்' சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர் ஏரார்பூங் கச்சி' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/99&oldid=863121" இலிருந்து மீள்விக்கப்பட்டது