பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 தமிழகக் குறுநில வேந்தர் மண்டபம் முதலிய திருப்பணிகள் சேதுபதிகளா லியற்றப் பட்டனவென் றெண்ணுகிறேன். அந்நூலிற் "கனவிஜய ரகுநாத லேதுபதி செய்த கொடிக்கம்ப மண்டபம் புகழக் கூவாய்குயிலே" என வருதலான் இஃதறியப்படும். இச் சேது நாட்டு நாட்டரசன்கோட்டைக்கண் இவ்வம்மை யருளால் அவித்தநென் முளைப்பதை யின்றுங் காணலாம்; இதனை, "கண்னுடைய தாய்மகிமை காசினியோ ரிவ்வளவென் றெண்ணுடைய தாய்மதிக்க வேலாது-

       மண்ணுடைய புன்முளைக்க வெத்தனைநாட் போகுமுட
       னேயவித்த நென்முளைத்தல் சான்று நிசம்"

என்னும் பாடலா னறிக.

 இங்ங்னம், கல்வியிற்பெரிய கம்பராற்புகழப்பட்ட பெருஞ்சிறப்பேயல்லாமல், உலகெலாம் கவிராகூடிஸ்ன் எனவும், கவுடப்புலவனெனவும், கூத்தன்கவிச்சக்கரவர்த்தி எனவும் ஏத்துங் கல்விச்சிறப்புடைய ஒட்டக்கூத்தர் பிறந்தது மலரியென்பது காட்டுவேன். கம்பர்திருமகனார் அம்பிகாபதி யார்க்குத் திருமகனாராகிய தண்டியென்னுந் தமிழாசிரியர், தாம் பாடிய அலங்கார நூற்கண்,

'சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தை யுள்ளே நின்றளவி லின்ப நிறைப்பவற்று-ளொன்று மலரிவருங் கூந்தலார் மாதர்நோக் கொன்று மிலரிவருங் கூத்தன்றன் வாக்கு’’ என்னும் வெண்பாவாற் செவியளந்துகொண்டு சிந்தை யுள்ளே நின்று அளவிலின்பநிறைக்கும் வாக்கையுடைய கூத்தரை மலரியென்னும் ஊரின்கண் வந்தவ ரென்றார்