பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவய்யங்கார் ‌109 இந்நூலுரைகாரரும், மலரி ஓரூர் என்று உரைத்தார். இவ்வூர் இச்சேது நாட்டு ராஜசிங்கமங்கலச்சேகரத் துள்ளது. இதன்கண்ணே வாழ்ந்த செங்குந்தர்வதியினர் பலர் வேற்றுார் புக்கு வாழ்கின்றனர். இவர் முதலிகள் எனப்படுவர். தமிழ்நாவலர் சரிதையுடையாரும் கூத்தரைக் கூத்தமுதலியாரென்றே வழங்குதல் காண்க. -

 இத் தொன்னூலாசிரியரே அன்றிச் செந்தமிழ்த் தொன்னூல்கட் குரையிட்ட நல்லாசிரியரும் இச்சேது நாட்டுண்டு. இதன் விரிவை தமிழ்ச்சங்க வெளியீட்டில் காணலாம் (1928)




இதிலுள்ள காளிகோயில் மிகப் பிரசித்திபெற்றது."காளியொட்டக் கூத்தன்"என்ற வழக்கும் ஈண்டு நினைக்கத்தகும். சோணாட்டுப் பேரளத்துக் கடுத்தும் மலரி என்ற ஊர் ஒன்றுள்ளது தெரிகின்றது. (செந்தமிழ்த் தொகுதி 25. பக்கம் 345-348):