பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா, இராகவய்யங்கார்

121

வராவர். கருதிய குறியினைத் தப்பாமலெறிதலும் எறிந்த வளரியை மீண்டு தங்கைக்கு எய்துவித்தலும் இவர்க்கே சிறந்த பெருஞ்செயல்களாயிருந்தன என்ப. ".

இத்தகை அரிய வளரிப்பயிற்சி, ஆஸ்டிரேலியா கண் உத்துத் தொன்றுதொட்டுள்ள காடுறைவாழ்க்கையரிடம் யாரும் வியக்கத்தக்க நிலையில் இக்காலத்தும் சிறந்துள்ள, தென்பர் மேற்றிசையார். அச்சேதுபதிகளது வடிவமைத்த பண்டைக் கல்லுவங்களிலெல்லாம். இடையிற் சுற்றிய வீரக்கச்சையில், இவ்வளரியே செருகப்பட்டுள்ளது இன் றைக்கும் காணலாம். இதுவே இவர்க்குரிய பேரடையாள மாவது: இவரது வீரக்கழல் சேமத்தலை எனப் பெயர் சிறக்கும். இது தம்மால் வெல்லப்பட்ட பகைவனது தலை யையே தமக்குச் சிறந்த தாளணியாக்கிக் கொண்டு விளங்கியமை குறிப்பதாகும்.

இச்சேதுபதிகள் முற்காலத்து எட்டன் எனப் பெயரிய ஒருவனோடு பொருது, அவனைப் போர் தொலைத்து, அவன் தலையையே தம்வீரக்கழலிலணிந்து கொண்டனரெனக் கூறுவர். இதனை, மிதிலைப்பட்டிச் சிற்றம்பலக் கவிராயர் பாடிய தளசிங்கமாலையில்,

சிலையா மெழுத்துஞ் சகாயமுங் கீர்த்தியுஞ் செந்தமிழு
நிலையாகு மன்னச்சொல் வார்த்தையு மென்றைக்கு நிற்குங் கண்டாய்
கலையாருங் கானில்வன் கல்லைப்பெண் ணாக்கிய காலிலெட்டன்

றலையார் விசய ரகுநாத சேது ,தளசிங்கமே.

என வருதலானே அறிந்துகொள்க. இராமேச்சரத்துத் திருக்கோயிற் பிரகாரமெல்லாம் நிறைந்துளள இச்சேதுபதிகள் கல்லுருவங்களில் இவ்வளரியுஞ் சேமத்தலையுமே சிறந்த அடையாளங்களாவன காணலாகும்.