பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தமிழகக் குறுநில வேந்தர்


இனிச் சோழரால் நாடாட்சி பிரித்தளிக்கப்பட்ட திரையரெல்லாம் தொண்டைமான்கள் எனப் பெயர்கொண்டாற். போல, இச்சேதுபதிகளால் நாடாட்சி பிரித்தளிக்கப்பட்டவராகிய புதுக்கோட்டையுடையாரும் தொண்டமான் எனப் பெயர் சிறந்தாராவர். அவர்களும் இச்சேதுபதிகளுடைய விஜயரகுநாதன் என்னும் பட்டத்தினை புனைந்து விளங்கு தலுங் கண்டுகொள்க. பண்டைக்காலத்துச் சேது நாடு என்பது இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை இம்முன்று ஸ்மஸ்தானங்களும் ஒருங்குசேர்ந்ததாகும். கிழவன் சேதுபதிகாத்துப் புதுக்கோட்டையும் (கி.பி. 1673-1708), பவானி சங்க சேதுபதிகாலத்துச் சிவகங்கையும் (கி.பி. 1724-1728), தனியரசு பெற்றனவாம். கி.பி.1673-ம் வருடம்வரை இம்மூவகை நாட்டிற்குஞ் சேதுபதிகளே தனித்தலைவராய்ச் செங்கோல் செலுத்தினராவர். இவர் வடநாட்டினின்று ஆரியர் பலரைக் கொணர்ந்து புண்ணிய சேதுவிற் றிருக்கோயில்கொண்ட ருளிய இராமேசர் கைங்கரியத்துப் புகுவித்துத் தாமும் அக் கடவுட்கு வருவழித் தொண்டராய்ச் சிறந்தனர். ராமநாத சுவாமி ஸ்காயம்' என்பதே பண்டைச் சேதுபதிகள் கையொப்பமாகும்.

'சூலங்கைக் கொண்ட விராமேசர் தாண்முடி சூடியெழு, ஞாலங்கைக் கொண்ட ரகுநாயகன்' எனவும் 'சூரியர் போற்றுமிராமேசர் தாளிணைக் கன்புவைத்த, சூரியன் வீரையர் கோன்ரகு நாதன்' எனவும் அமிர்த கவிராயர் கூறுதல் காண்க. இவர் சாஸனங்களில் 'ஆரியர் மானங்காத்தான் என ஓர் விருது வழங்குவதும் இவர் ஆரியரைப் போற்றிவந்தமை குறிக்கும்.

இச் சேதுபதிகள் இராமநாதபுரமாகிய முகவையைத் தமக்குரிய தலைநகராகக் கொள்ளுதற்கு முன்னே சேது நாட்டிற் பல ஊர்களைத் தலைநகராக்கி வதிதனரென்பது, பழைய சாஸனங்களானும் பாடல்களானும் அறியப்படுகின்றது; அவ்வூர்களாவன: