இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ரா. இராகவய்யங்கார்
123
1. | குலோத்துங்க சோழநல்லூர் | (சாஸனம்) |
2. | விரையா தகண்டன் | (௸) |
3. | செம்பி | (மருதுறைக்கோவை) |
4. | கருந்தை | (௸) |
5. | வீகை வீரை | (௸) |
6. | தேவை | (௸) |
7. | மணவை | (௸) |
8. | மழவை | (௸) |
9. | புகலூர் | (௸) |
என இவையாம்.
இவ்வூர்களில் அரசாண்ட பழைய சேதுபதிகள் பெயர்கள் முறையே தொடராக இப்போது கிடைக்கப்பெறாவிடினும் சேதுபதிகள் வரலாறு குறித்துள்ள பழைய கையெழுத்துப் பிரதியொன்றாற் சிலபெயர்கள் அறியலாவன. அப்பெயர்கள் வருமாறு:-
1. | ஆதிரகுநாதசேதுபதி, |
2. | ஜயதுங்கரகுநாதசேதுபதி |
3. | அதிவீரரகுநாத சேதுபதி, |
4. | வரகுணரகுநாத சேதுபதி, |
5. | குலோத்துங்க சேதுபதி |
6. | சமரகோலாகல சேதுபதி, |
7. | மார்த்தாண்டபைரவ சேதுபதி, |
8. | சுந்தரபாண்டிய சேதுபதி, |
9. | காங்கேயரகுநாத சேதுபதி |
10. | விஜயமுத்துராமலிங்க சேதுபதி. |
இவர்கள் சேது நாட்டுள்ள சில பழைய கோயில்களைக் கட்டுவித்தனர் எனவும், அவற்றிற்குச் சில கிராமங்கள் அளித்தனர் எனவும், கூறுவதேயல்லது, வேறு இவர் காலம், ஊர், செயல் முதலியன ஒன்றும் விளங்குமாறு, அவ்வரலாறு கூறிற்றில்லை. இவர்க்குப் பின் கி.பி. 1604-ஆம் வருடமுதல் இந்நாடாண்ட சேதுபதிகள் வரலாறே, அஃது ஒருவாறு தொகுத்துரைப்பதாகும். அதுவே Mr. Nelson's