126
தமிழகக் குறுநில் வேந்தர்
எனதன்ம மாகிலுந் தரன்கற்ப கால மிருக்கவுன் போன்
மனதி னினைந்த படிசெய்ய யார்க்கும் வராது கண்டாய்
கனதன மாறிருப் புல்லாணிக் கோபுரங் கட்டுவித்த
என்னுந் தளசிங்கமாலைப்பாடல்களான் அறிந்து கொள்க.
இவ்வேந்தர்களது செந்தமிழ்வண்மை ஒருதுறைக் கோவையிற் பலவாறாய்ப் புகழ்ந்து பாராட்டப்பட்டுள்ளது. சேரசோழபாண்டியர்க்குப் பின் தனித்தமிழ் அரசர்களாய் இச்சேதுபதிகளே செந்தமிழ்ப் பரிபாலனஞ்சீர்பெறவியற்றினரென்ப. ஒருதுறைக்கோவை பாடிய பொன்னாங்கால் அமிர்த கவிராயருக்குப் பதினாயிரம் பொன் பரிசில் அளித்தனரெனக்கூறுவர். இதனைக் “கோவைத் துறைக்குப் பதினா யிரம்பொன் கொடுத் திசைகொள், தேவைத் துறைக்குத் துரைரகு நாதன்” என அக்கவிராயர் பாடியதனானே அறியத்தக்கது.
இவ்வொரு துறைக்கோவை கொண்டவர், திருமலை ரகுநாதசேதுபதி என்பவர். இவர் தளவாய் சேதுபதியின் புதல்வர்; தமிழிற் செய்யுள் செய்தலிலும் வல்லவர் என்ப. அமிர்தகவிராயர் இவரைத் “தளவாய் குமாரன்” எனவும் 'காக்குங் கருணையுங் கல்வியும் வாழ்வுங் கவிமதுர, வாக்குந் தழைத்து ரகுநாதன்' எனவும் கூறுமாற்ற னிவையறியப்படும். இவ்வாறே இச்சேதுபதிகள் நல்லுதவி பெற்றுச் சிறந்த செந்தமிழ்ப்புலவர் பலராவர்.
யானறிந்தவளவில் அப்புலவர்கள் பெயர்களும் அவர்கள் பாடியனவும் ஈண்டுக் கூறுகின்றேன்.
புலவர் | பாடியது |
அகோரதேவர் | திருக்கானப்பேர்ப்புராணம். |
திருமறைக்காடு-திருச்சிற்றம்பலதேசிகர் | திருவாடானைப் புராணம். |
காடடர்ந்தகுடி-தலைமலை கண்ட தேவர் | மருதூரந்தாதி. |