பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவய்யங்கார்

21


நாகனை ஆள்வர். வியாள பத்ரா என்ற குளிர் காலம் வேள்பத்ரா என வழங்கப்படும். (ஆல் பெருந் 120) பாரசீக மொழியிலும் வேள் என்பது அரசர்க்கும் பிரபுக்களுக்கும் வழங்கல் அவர் நூல் கொண்டுணர்க. ஶ்ரீ பாகவத நூலார் "ஸங்கர்ஷணம் அஹறிந்த்ரம்" என அலாயுதனுக்கு வழங்குதல் காண்க. அலாயுதன் ஆதிசேஷாவதாரம் என்பது அறிந்தது. அலாயுதத்தால் நீர்ப்பெருக்கை ஈர்த்து வற்றச் செய்து ஜலோத்பவனைக் கொன்று நிலத்தை உண்டு பண்ணிய வரலாற்றானும் அலாயுதனாகிய அஹிந்த்ரனுக்கு இத்தேச சம்பந்தம் உணரலாம். J. Tod என்பவர் ஆள் என்னும் பெயரைத் தஷகன் வழியிற் பொருத்திக் காட்டுவர் (vol. i. p. 68.) விழிஞத்தையுடைய வேள் நாடாண்ட ஆய் வழியினன் கருநந்தடக்கன் எனத் தன் சாசனங்களிற் கூறிக் கொள்வதும் கச்மீர வேந்தர் மரபு பற்றியாமென்க. இக்குலம் கோநந்தன் முதலாகத் தொடங்குதல் தரங்கினியால் நன்கறிந்தது.

இந்நாகர் முடிசூடியாண்ட அரசராதலால், தமிழில் முடி நாக ராயர் என்ற பெயராலும், சூடு நாக குலச் சாசனங்களாலும் அறியலாம். ராஜதரங்கினியில் கச்மீரத்தை நாகர் வழியினர் (நாகரை வழிபடுவோர்) ஆண்ட வரலாறு கூறுதலானும் இவ்வுண்மை உணரப்படும். இந்நாகர் உயர்குடியினராதல் இதிகாச புராணங்களிற் சிறந்த கூத்திரிய வேந்தர் இக்குலத்தின் மகளை மணந்த செய்தி பல்லிடத்துங் கேட்கப் படுதலான் அறியலாம். இக்குலத்தவர் காசியரால் உண்டாக்கப்பட்டு அவரால் நிறுவப்பட்ட ஸ்திஸ்ரஸில் வாழச் செய்யப்பட்ட நீல நாகனைத் தந்தேசங்காக்குந் தெய்வமாக வழிபடும் இயல்பினர் என்பது, ராஜதரங்கினியிற் (! 182, 183, 184) காணலாம். தமிழிற் பட்டினப் "பல்லொளியர்" என்புழி நச்சினார்க்கினியர், ஒளியராவார் பிற மண்டலங்கட்கு அரசாதற்குரிய வேளாளர் என உணர த.கு.வே-2