பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

:36 தமிழகக் குறுநில வேந்தர்

தெறிகின்றேன்.இவ்வுண்மை அரசன் 'வேளாவிட்டாவை மண்டலேசனாக்கினான்’ (தரங்கினி v1. 73) எனக் கூறுத லான் அறியலாம். அகநானூற்றில் 29ஆம் பாடலைப் பாடிய நல்லிசைப் புலவர் வேளாவிட்டனன் எனப் பெயர் சிறத்தல் கண்டு கொள்க. இப்பெயர் வழக்கம் காஷ்மீர தேயத்தினின்று தெற்கண் வந்ததென்று நினையலாம். வேளாவிட்டா அரசவையில் வேளைக்கணியாவன். இவன் நிலையிலுயர்ந்தவனாதல் 'மூவகைக் காலமு நெறியி: னாற்றிய வறிவன்றேயமும் (தொல். புறத் .20) எனத் தொல்காப்பியனார் கூறியதனானறியலாம். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் வேளாண் சாமந்தர் என்றார் (சிலப். 5, 45) இவற்றால் சிங்களத்தும் பழைய சங்கத் தமிழ் நூலினும், காஷ்மீர சரிதங்களினுமே வழங்கப் படுகின்ற இவ்வரிய 'வேளாவிட்டா” என்னும் பெயர் கொண்டு இத்தென்னாட்டிற்கும் முற்காலத்தே ஓர் தொடர்புண்மை உய்த்துணரலாகும்.

இனித் 'திவாகர நூலார்' 'வேளிரும் புரோசருங் குறுநில வேந்தர்” எனக் கூறுதல் காணலாம். இதனாற் குறுநில: வேந்தரான வேளிர் புரோசர் எனவும் பண்டைக் காலத்து வழங்கப்பட்டனரெனத் தெரிவது. ப்ரோஜர் என்பது முற்றோன்றியவர் என்று பொருள் படுவதாகும். வேளிரை சங்க நூல்களிற் பல்லிடத்தும் 'தொன்முது வேளிர்' (புறம் 24 அகம் 258) 'தொன்று முது வேளிர்' (குறுந்தொகை:164). (நற்றிணை 280) எவ்விதொல்குடி (புறம். 202) எனவும் வழங்குதலான் இவர் முற்றோன்றி யவராகக் கருதப்படுதலறியலாம். இதனுண்மை நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி, மகட்பாலஞ்சிய மகப் பாலானும் (தொல்-புறத் 77) என்பதனுரையில் உரை ஆசிரியர் 'முதுகுடி வேளாண்குடியினைக் குறித்தது' என வரைந்து அதற்குப் பெருஞ் சிக்கல் கிழான் மகட் கொடை மறுத்ததென்று 'நுதி வேல் கொண்டு நுகல்விய துடையா” என்னும் புறப்பாட்டை உதாரணங்காட்டு,