பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 தமிழகக் குறுநில வேந்தர் சாளி யயினி பொற்கலத் தேந்தி யேலு நற்சுவை யியல்புளிக் கொணர்ந்து வெம்மையிற் கொள்ளுமடையினன் செம்மையிற் பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் நாற்கடல் கால மாள்வோன் றன்னின் முரசொடு வெண்குடை கவரி நெடுங்குடை உரைசர வங்குசம் வடிவேல் வடிகயி றெனளிவை பிடித்த கையினனாகி எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி மண்ணகங் கொண்டு செங்கோலோச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு நெடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் உரைசால் சிறப்பு நெடியோன் ... அரைச பூதத் தகுந்திறற் கடவுளும்' (சிலப்பதிகாரம்) எனக் கூறியதனாலுணரலாம். ஈண்டு 'நெடியோன்' உலகளந்தானல்லாமல் பாண்டியன் என்றும் அரும்பத வுரைகாரர் கூறுதல் காண்க. இங்கே கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்ட செய்தி, மேகவாகனற்கு ஒப்பது அவன் எவ்வுயிருங் கொல்லாது உலகு வென்று கொண்ட அரிய செயலாதல் உணர்க.

பாண்டியனாகத் துணியுமிடத்துப் புரக்கும் உரைசால் சிறப்பு என்றதற்கு நானிலம் புரக்கு முரைமைந்த சிறப்பு என்க. பிறரை வருத்தாது எல்லா அரசரையும் வென்ற அரிய சிறப்பினையே ஈண்டுக் குறித்தாரென்பது தெள்ளிது. மேகவாகனன் இலங்கையிற் சேரற்குக் கடலைக் கடப்பது எங்ஙனமென்று தென் கடலாகிய இரத்தினாகரத்தின் கரையிற் படையுடன் தங்கி ஆராயும் போது கடற்கரையடுத்த காட்டில் 'மேகவாகனன் ஆட்சியிலும் யான் இவ்விதம் கொல்லப்படுகின்றேன்' என்ற அழுகுரலைக் கேட்டனன் என்று தரங்கினி (lll, 30-31) கூறுதலான் இம்மேகவாகனன் இமயந்தொட்டுக் குமரி