பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 தமிழகக் குறுநில வேந்தர் இவரே தமிழ் நாட்டு ஒளியர் எனப்பட்டாரென்றும் இவர் நாக நாட்டினின்று குடியேறியவராதலான் ஒளி நாக ரென்று தென்னாட்டாரான் வழங்கப்பட்டனரென்றும் துணியலாம். - இனி இப்பாண்டியர்க்குரிய பொதியமலையில் அரசு செலுத்திய 'வேள் ஆஅய் என்பவன் லோக நல்கிய கலிங்கம் ஆவமர் செல்வற் கமர்ந்தனன் தொடுத்த (சிறுபாண். 96-97) வரலாறு சிறுபாணாற்றுப் படையிற் கேட்கப்படுவது. ஈண்டுக் குறித்த நீலநாகம் கச்மீரதேசத்து நீர்நிலைகட்கெல்லாந் தலைமை நாகதேவதை என்று துணியலாகும். கலிங்கம் என்பது அக்கச்மீரத்துத் தலை சிறந்த கம்பளப் போர்வை ஆகும். ஆஅய் என்னும் பெயர் அஹறி (நாகம்) வழியினன் என்று பொருள்படும் 'ஆஹய' 'என்னும் மொழியின்றிரிபாகும். இதற்கேற்பவே அவனை 'அண்டிரன்’ என்பதும் அஹுந்த்ரன் என்பதன் மரூஉ ஆதல் உணர்க. இது மஹேந்த்ர்ன் என்பது மயேண்டன் என வந்தாற் போல் வது மயேண்டன் என்பார் எட்டுத் தொகையிற் கண்ட புலவர் ஆவர். இவ்வேள் ஆஅய் நாகர் வழியினனென்பது கருதியே 'வழைப்பூங் கண்ணி வாய் வாளண்டிரன்’ எனப் பாடப்பட்டனன் என உய்த்துணரலாகும். வழைப் பூங்கண்ணி நாக மலர் மாலை யாதல் உணர்க. இனிப் பேகன் என்னும் வள்ளல் அருந் திறலணங்கின் ஆவியர் பெருமகன்' (சிறுபாண் 86) ஆவி யர் கோ (புறம் 141) என வழங்கப்படுதல் கற்றாரறிவர். இவன் முன்னோன் வேளாவி' எனப்பெறுதல் முழுவுறழ் திணிதோள் நெடு வேளாவி, பொன்னுடை நெடு நகர்ப் பொதினி (அகம் 61) என வருதலான் அறியலாம். இங்ஙனமே பதிற்றுப் பத்துப் பதிகங்களில் வேளாவிக் கோமான் (6-ஆம் பத்துப் பதிகம்) எனவும், வேளாவிக் கோமான் பதுமன் (4ஆம் பத்துப் பதிகம்) எனவும் வருதல் அறியலாம். ஈண்டு ஆவி என்றது நீர்நிலையாகிய வாவியாய் அதனாற் பெயர் பெற்றானைக் குறிப்பதாகும். கச்மீரத்து நீர்நிலைகளெல்லாம் நாகம் என்ற பெயரால்