பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழகக் குறு நில வேந்தர்

நகரம் அமைத்து வாழ்ந்தனன் என்றும், அவருள்ள இடம் தருவாச முனிவர் சாபத்தாற் பழையபடி நீர் நிலையாயிற்றென்றும் அதன்கண் பதும நாகன் வதிதனன் என்றும், நீலமட புராணங் கூறும் (நீலமட 976—1008) இக்கதையால் இஃதுலர்ந்த குளமாதல் உணரலாம். தரங்கினியில் இப்பதுமஸரஸைப்பற்றிய மற்றொரு கதையும் ஈண்டைக்கு ஏற்பதாகும். ஜயாபீடன் ஆட்சியில், இந்நீர் நிலையிலுள்ள பதுமநாகன் திராவிட மந்த்ரவாதி ஒருவனால் மழையில்லாத ஒரு மருப்ரதேசத்திற்கு ஈர்க்கப்படுவதாகக் கூறித் தன்னைக் காக்கும் வண்ணம் அவ்வரசனை வேண்டி, அங்ஙனங் காத்தால் அவனுக்கு ஓர் பொற் சுரங்கமுள்ளதைக் காட்டுவதாகக் கூற, அரசனும் பதுமநாகனுக்கு அபயமளித்தனனென்றும் பின் தன்னுளளத்தாகையால் அரசன் அத்திராவிட மந்த்ரவாதியைப் பதுமஸரஸில் மந்த்ரவலியைக் காட்டும்படி வேண்ட, அவன் அரசன் கண் முன்னே அந்நீர் நிலையை உலரச் செய்து அரசன் விரும்பியவாறு திரும்பவும் நீர் நிலையாக்கினன் என்றும், (4ஆம்—தரங்கம் 593 முதற் காண்க) கூறுதலால் இஃதுணரலாம். இக்கதையால் முன்னம் பத்மஸரஸிற் குடியேறி வதித மக்களே திராவிட முனிவனால், தென் தேசத்திற்குக் கொணரப்பட்டனர் என்பது மட்டில் ஊகித்து கொள்ளலாம். இவற்றால் வையாவி என்பது பழையதோர் கதையைத் தன்கண் பொதிந்து வைத்துள்ள தொடரதல் இனி துணரலாம். இனி இக்கச்மீரநாட்டு ஸதிஸரயாலாகிய நீர்ப் பெருக்கை அஹீந்த்ரனான அலாயுதன் வற்றச் செய்து வதியும் நிலமாக்கினன் என்று நீலமடபுராணங் கூறுதலான் உலர்ந்த குளத்தினின்றுண்டாகிய நிலத்தின்னென்று வேளொருவன் வையாவியெனப் பெயர் பெற்றனன் என்று கொள்ளினும் பொருந்தும். இனிச் சீன தேயத்துப் பழைய மக்களில் வை (wei) என்ற குலம் ஒன்றுண்டு . (invia and china 2) கச்மீரத்தில் நாகு என்பது பாம்பிற்கும் நீர் நிலைக்கும் பெயர். தமிழிலும் இலஞ்சியென்பது மடுவிற்கும் பாம்பிற்கும் பெயராதல் நோக்குக. பழந்தமிழர் நாகர்