பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகக் குறுநில வேந்தர்

கிளங் கோசர் குடகக் கொங்கர் என வழங்கப் பட்டனரென்றும் கூறுவாருண்டு.

எங்ஙனமாயினும் கொங்கிளங் கோசர், கோசர் துளுநாடு என்பவற்றால் இவர் ஆதியில் வதித இடங்கள் கொங்கு நாடும், துளுநாடும் எனக் கொள்ளல் பொருந்தும். இக் கோசர் கண்ணகிக்கு விழாவுஞ் சாந்தியுஞ் செய்தல் கேட்கப்பட்டவற்றால், இவர் சேரவேந்தன் செங்குட்டுவனை யொத்து வேத வழக்கொடுபட்டவரல்லாது பிறராகாரென்று துணியலாம். இவரும் பிறரும், இலங்கைக் கயவாகு வேந்தனும்,

“இமயவரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில்,
வந்தீகென்றே வணங்கினர் வேண்டலான்”

(சிலப். வரப்தரு. 161-163)

இவ்வுண்மை யுணர்க. கோசர் புரிந்த விழாவுஞ் சாந்தியும் வைதீகமேயாமென்று கொள்க.

இவ்வாறு வேத வழக்கொடுபட்டுக் கோசர் என்ற பெயரிற் சிறந்த இவ்வீரருடைய அரிய செய்திகள் பல செந்தமிழ்ச் சான்றோர் தொகை நூல்களிலாங்காங்குக் கேட்கப்படுவனவேனும், இவர் பண்டு தொட்டுள்ள தமிழ்க் குடிமக்களெனத் துணிதற்கில்லை.

கோசர் துளுநாடு என்றதனானும் (அகம். 15) “நான் மொழிக் கோசர்” (மதுரைக் காஞ்சி) என்றதனானும், இவரைத் தமிழரென ஒருதலையாகத் தெளிதலரிதாதல் காண்க. ‘இவரைப் ’ பாடிய பல்லிடத்தும் நல்லிசைப் புலவர்,

“இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கட் கோசர்”

(அகம். 90) எனவும்


“துனைகாலன்ன புனைதேர்க் கோசர்” (அகம். 251)

எனவும்