பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

79


இலங்கு நீர்ப்பரப்பு-கடல் எ.று இதன்கண் உண்டான வளைகள் (சங்குகள்) போல்வர் இக் கடனிரின் வந்த குடியினர்-அக் குடியினராகிய சங்கங்களினு மேம் படுத்துப் புகழப்பட்ட வசை நீங்கு சிறப்பினையுடைய வலம் புரியை ஒப்பவன் இத் திரையன் என்று விளக்கியது கண்டு தெளிக. வலம்புரி அருமையிற் றோன்றியதற்கும் வசை நீங்கு சிறப்பு மூவரின் மேம்படுதற்குங் கொள்க. உரைகாரர் 'மூவருள்ளும்' என்பதற்கு மூவரினும் என்றது காண்க. மூவர் உள்ளுஞ் சிறப்பு மூன்று பேரரசரும் தமக்கில்லையே என்று நினையுஞ் சிறப்பு எனினுமமையும். நீர்ப்பரப்பின் வலம்புரியை உவமித்தது 'கடல் யான் பயந்தேன்' என்று செருக்குவதாகக் கூறியதனோடு இனிதியைந்து பொருள் சிறத்தல் காண்க.

இவற்றிற்கெல்லா மியையவே மகேந்திர பல்லவன் சிராப்பள்ளிக் குன்றிற் பொறித்த சாசனப் பகுதியில் அவன் தன் விருதுப் பெயர்களினிடையே 'குவத் ரோனன்” எனக் கூறிக்கொள்ளுதல் சேற்கப்படுவது. நீரர மகளிர் இயல்பு பெருங்கதையின்,

மறுவி றெண்ணி ராழ்கய முனிந்து
நறுமென் குவளை நான்மலர் பிடித்து
நேரிறைப் பணைத்தோள் வீசிப் போந்த
நீரர மகளிவ னிர்மையு மதுவோ' (4, 17. 37–40)

என வருதலானுமறிக. தக்க யாகப் பரணி

'வாரிதி ... ... சிகர சீகர வருவி நீரர மகளிர்” (30)

என்பதற்கு, ‘மந்தர பர்வதத்துத் திருவினாற் கடற்றிவலையிற் புறப்பட்ட அருவி நீரினின்று தோன்றிய தெய்வப் பெண்கள் என உரைகாரர் கூறி இங்ஙனம் உற்பவித்தார் என்றது "வங்கிச சுத்தம்' சொன்னவாறு என விளக்கியதையும் நோக்கிக்கொள்க. இந் நூலிற்றிரை தருமரபென்றதும் வங்கிச சுத்தஞ் சொன்னதாகக் கொள்க.