பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121

பயிரிடத் தொடங்கினர். அரசியலார் சோதனைத் தோட்டங்களை நிறுவி, உயர்ந்தரகப் பழங்களைப் பயிரிடுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்தனர். இத்தொழில் இப்பொழுது மிக்கவருவாய் அளிக்கும் ஒன்றாக விளங்குகிறது. ஆப்பிள், பேரி, சீமைமாதுளை (Quince), சீமைக் கொவ்வை (peach), திராட்சை , பெருந்திராட்சை (Apricot), ப்ளம் திராட்சை , {plum), செர்ரி, கூஸ்பெர்ரி, முள்ளி (Rasp-berry), ஸ்ட்ரா பெர்ரி, மல்பெர்ரி, அத்தி (fig), கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை , நெக்டரின், பெர்சிம்மன், செரிமாயர் முதலிய பழங்கள் நிறைய விளைகின்றன.

மொழிகள் :

கோவைத்தமிழும், கேரளத்து மலையாளமும், மைசூர்க் கன்னடமும் ஒன்று சேரும் இடத்தில் நீலகிரி மலையானது உள்ளது. ஆகையால் இம் மூன்று மொழிகளின் சிதைவுகளே {dialects) இம்மலை வாழ் மக்களால் பேசப்படுகின்றன. தமிழ், படகா, மலையாளம், தெலுங்கு, குறும்பா, இந்துஸ்தானி, ஆங்கிலம் ஆகியவை இங்கு வழங்கும் முக்கிய மொழிகள். படகா சிதைந்த கன்னடம். இங்குவாழும் பழங்குடி மக்களால் பேசப்படும் துதம் (Toda language) முதலிய மொழிகள் யாவும் கால்டு வெல்லின் கூற்றுப்படி, திராவிட மொழியினத்தைச் சார்ந்தவை.

சமயம் :

இந்து, பார்சி, இசுலாம், கிறித்தவம் ஆகிய நான்கு சமயங்களே இம்மலையில் வாழும் மக்களால் கடைப்பிடித்து ஒழுகப் படுகின்றன. ரோமன் கேதலிக், சர்ச் ஆஃப் இங்கிலாந்து, அமெகரின் மிசன், சினானா மிசன், பாசில் லுதரன் மிசன் ஆகியகிறித்தவ நெறியினர் இங்குத் தத்தமக்குரிய கோயில்களை அமைத்துக் கொண்டு, சமய வளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறனர்.