பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தொழில் :

குறும்பர்கள் தோடர்களைப்போல் மேய்ச்சல்காரர்களுமல்ல; படர்களைப் போல் நிலக்கிழார்களுமல்ல, இவர்கள் கோதர்களைப் போல் ஏழைகள். பிற இனத்தார்க்குப் பணிபுரிந்தே வாழ்பவர்கள், தோடர்களுக்கு இவர்கள் அஞ்சுவதுமில்லை; மற்றவர்களைப் போல் 'குடு' கொடுப்பதுமில்லை. கோதர்களோடு சேர்ந்து மற்றையோர்க்கு இசைப்பணி புரிந்து வாழ்கின்றனர். மந்திர வித்தையில் இவர்கள் மிகவும் வல்லவர்கள். இதனாலேயே இவர்களைக் கண்டு மற்ற இனத்தார் மிகவும் அஞ்சுகின்றனர். 'படகர்' வாழும் ஒவ்வொரு சிற்றூரிலும், அவர்களுக்குத் துணைபுரிவதற்காகக் குறும்பர்களை அமர்த்திக் கொள்ளுவதுண்டு. நிலத்தை முதன் முதலாக உழும் சடங்கையும், முதல் விதையை விதைக்கும் சடங்கையும், முற்றிய பயிரை முதன் முதலாக அறுக்கும் சடங்கையும் நிகழ்த்திவைக்கப் படகர்களால் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். படகர்களின் நிலத்தில் பண்ணையாட்களாகவும் குறும்பர்கள் பணிபுரிகின்றனர், கால் நடைகளுக்கும், பயிர்களுக்கும் ஏற்படும் நோயைத் தீர்ப்பதற்குப் படகர்கள் இவர்களையே நாடவேண்டியிருக்கிறது. இப்போது குறும்பர்களிடம் படகர்கள் கொண்டிருக்கும் அச்சம் சிறிது குறைந்துவிட்டது எனலாம். பண்டைக்காலத்தில் படகர்கள் கொண்டிருந்த அச்சத்தைப் பற்றி திரு. மெட்ஸ் (Mr. metz) என்ற ஐரோப்பியர் குறிப்பிடும் போது, “ஒரு படகன் தனியாக ஒரு குறும்பனைக் காட்டிற்குள் எதிர்பாராதவிதமாகக் காண நேரிட்டால், அஞ்சி நடுங்கி அப்பொழுதே உயிர்விட்டுவிடுவான்" என்று கூறுகிறார்.

ஜேன் குறும்பர்கள் மலை இடுக்குகளில் உள்ள மலைத் தேனீயின் கூட்டை அழித்துத் தேன் எடுப்பதில் வல்லவர்கள், இதை இவர்கள் தொழிலாகவும் கொண்