பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

அவன் அவரை நிமிர்ந்து கூடப் பார்க்கவுமில்லை ; அவருடைய வினாக்களைச் செவியில் வாங்கிக் கொள்ளவுமில்லை. பிரபு மேலும் மேலும் வினவவே, அவன் பொறுமை யிழந்தான். உடனே தலை நிமிர்ந்து, "ஏனய்யா! உனக்கு வேறு வேலையில்லையா? உம் வழியைப் பார்த்துக்கொண்டு போம். பக்கிங்காம் பிரபு என்ற எண்ணம் போலிருக்கிறது!" என்று சினந்துரைத்தான். உடனே பிரபு தன்னை மறந்து சிரித்தார். வேலைக்காரன் அவரை உடனே யாரென்று உணர்ந்து கொண்டான். தன் செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.

அரசியல் மனைக்குச் சற்று மேலே, காட்டிலாகா அதிகாரி ஒருவரால் பயன்படுத்தப்பட்ட குடிசை யொன்றுள்ளது. அரசியல் மனையில் தங்கியிருந்த ஆளுநரின் குழந்தைகள் அங்குச் சென்று விளையாடுவது வழக்கம். இப்பொழுது அது இன்ப விருந்து (Picnic) உண்ண மிகவும் ஏற்ற இடமாக விளங்குகிறது.

உதகமண்டலம்

பெயர்க் காரணம் :

உதக மண்டலம் என்று இந்நகருக்குப் பெயர் ஏற்பட்டது பற்றி ஒரு செவி வழிச் செய்தி உலவு கின்றது. 'மண்டு' என்ற சொல் தோடர் வாழும் சிற்றூரைக் குறிக்கும் என்று முன்பே குறிப்பிட்டேன். திருவாளர் சல்லிவன் கட்டிய கல்மனை அமைந்திருக்கும் இடம், முன்பு ஒரு மண்டுவாக இருந்ததாம். ஒவ்வொரு மண்டுவிலும் வழக்கமாக நான்கைந்து குடிசைகள் இருக்கும். ஆனால் இந்த மண்டுவில் ஒரே ஒரு குடிசைதான் இருந்ததாம். பார்த்கை (Parth-Kai) என்ற ஒரு வயது முதிர்ந்த தோடர் குலச் செல்வன் அக் குடிசையில் தன் குடும்பத்தாரோடு வாழ்ந்து