பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

காடுகளில் நுழைந்தால் தோடரின் வாழ்விடங்களைக் காணலாம்.

மூக்கறுத்தியில் அமைந்திருக்கும் தங்கல் மாளிகை (Dak Bangalow) அழகியதாகவும், வசதியான தாகவும் அமைந்துள்ளது. இது அணைக் கட்டிலிருந்து ஒருகல் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வணை கி. பி. 1835இல் இருந்து கி. பி. 1938 வரை கட்டப்பட்டது. இது உருவத்தால் சிறியது. ஆனால், இதில் இரண்டு எதிரொலிகள் தோன்றுகின்றன. முதல் எதிரொலி தொடங்கி அரை நிமிடம் கழித்து இரண்டாவது எதிரொலி தோன்றுகிறது. இங்குள்ள ஏரி பார்ப்பதற்குச் சிறிதாகத் தோன்றும். ஆனால் இது மூக்கறுத்தி மலையைச் சுற்றிப் பரவியுள்ளது. இவ்வேரியின் நான்கு பக்கங்களிலும் நிறையப்பேர் மீன்பிடித்துப் பொழுதைக் கழிக்கின்றனர். இவ்வேரியில் தோணியூர்ந்து சென்றே மூக்கறுத்தியின் அடிவாரத்தை அடைய முடியும். அடி வாரத்திலிருந்து அச்சிகரம் மிகவும் செங்குத்தாக உயர்ந்து செல்லுகிறது. உதகமண்டலத்திலிருந்து பார்ப்போருக்கு அவ்வுச்சி தெளிவாகத் தெரியும். இவ் வேரியைச் சுற்றியிருக்கும் கரடுமுரடான பாதை 12 கல் நீளமுடையது. இப்பாதையில் நடந்து ஏரியை வலம் வருதல் பெருவெற்றிக்குரிய செயலாகும்.

கவர்னர்ஸ் ஷோலா {Governor's Shola) என்ற இளமரக்காடு குறிப்பிடத்தக்க அழகுவாய்ந்தது. அக்காட்டின் இடையே நிழலடர்ந்த மரங்களினடியில் புகுந்து செல்லும் 5 கல் நீளமுள்ள பாதை, இங்கு வாழ்ந்த மாநில ஆளுநர்களுக்கு மிகவும் பிடித்தமானது. கன்னமரா பாதை என்ற மற்றொரு வழி 10 கல் நீளமுள்ளது. குடை மரங்க (Umbrella trees) ளிடையே இப்பாதை புகுந்து செல்லும் காட்சி பேரழகு ஆப்பது. இப்பாதையிலிருந்து ஒருகல் தொலைவு சென்றால் இன்ப விருந்து (Picnic) உண்பதற்கான