பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207

இம்மலை மீது அமைந்துள்ள பூம்பாறைப் பள்ளத்தாக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. இப் பள்ளத்தாக்கின் இருபுறச் சரிவுகளும் சம அளவுள்ளவை. இச் சரிவுகளில் பயிர்த்தொழில் சிறந்த முறையில் நடைபெறுகிறது. எங்குப் பார்த்தாலும் அழகிய இள மரக் காடுகள் உள்ளன, அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிளவுபட்ட நிலப்பகுதிகள் உள்ளன. சுற்றிலுமுள்ள நிலங்களின் தாழ்ச்சியினால் ஏற்பட்ட சிறு சிறு செங்குத்தான மேடுகள் தென்படுகின்றன. இப்பள்ளத் தாக்கின் உச்சியில் அமைந்துள்ள ஒரு மேட்டு நிலத்திலேயே 'பூம்பாறை' அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய 2000 மக்களே வாழ்கின்றனர். மேல் பழனி மலைமீது அமைந்துள்ள சிற்றூர்களில் இது முக்கியமானது. இம்மலைமீது நிலவரி வசூலிப்பதற்கான அலுவலகம், முன்பு இங்கு தான் அமைந்திருந்தது. இங்கு அமைந்துள்ள சுப்பிரமணியர் கோவில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். விழா நாட்களில் பழனிமலையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் இங்கு வந்து கூடு கின்றனர்.

மேல்பழனியில் அமைந்துள்ள வீடுகளின் சுவர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பொருத்தப்பட்ட மூங்கில் கழிகளின் மேல் மண் பூசப்பட்டுக் கட்டப்படுகின்றன. கூரை புற்களால் வேயப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் கனப்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் குன்னுவர், காரக்காட்டு வெள்ளாளர் (கார்காத்த வேளாளர்) என்ற இரு இனத்தாரும் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் தொகை மிகக் குறைவு. மேல் பழனி, கீழ்ப்பழனி ஆகிய எல்லா இடங்களிலும் வாழும் மக்களின் மொத்தத் தொகை 20,000.

மதுரை மாவட்டத்திலுள்ள மலைகளினிடையே ஈடும் எடுப்புமற்றுப் பழனிமலை பெருமிதத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. காலைஞாயிற்றுப் பொன்னொளி