பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

விடம் முதலில் சதுப்பு நிலமாக இருந்தது. ஒரு சிற்றோடை அதன் நடுவில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. மதுரை மாவட்டத் தண்டலராக இருந்த திருவாளர் லிவெஞ் (Mr. Levenge) என்பார், கி. பி. 1863 ஆம் ஆண்டு திட்டமிட்டு, அரசியலாரின் நன்கொடையையும், தம் கைப்பணத்தையும் செலவிட்டு அச்சிற்றோடையைச் சுற்றிக் கரை அமைத்து, ஏரியாக மாற்றினார். அழகிய அவ்வேரியைச் சுற்றிப் பசுமரங்கள் அடர்ந்த வழிகள் பல அமைந்துள்ளன. அவ்வழிகளிலேயே எழில்பெறு மனைகள் பல எழுப்பப்பட்டுள்ளன. இவ்வேரி உருவத்தால் ஒரு நட்சத்திர மீனை (Star fish) ஒத்து இருக்கிறது. இதன் குறுக்களவு ½ கல் இருக்கும். ஆனால் இதன் சுற்றளவு 3 கல் நீளம் இருக்கும். ஏரிக்கரையைச் சுற்றி ஒட்டினாற்போல் ஒரு பாதை செல்லுகிறது. அப்பாதைக்குச் சற்று மேலே ஒரு பாதையும், அதற்கு மேல் மற்றொரு பாதையும் சரிவுகளில் அமைந்துள்ளன. அவைகள் முறையே 'நடு ஏரிப் பாதை' (Middle Lake Road) என்றும், 'மேல் ஏரிப் பாதை' (Upper Lake Road) என்றும் அழைக்கப்படுகின்றன. இம்மூன்று பெருஞ்சாலைகளும், இடையிடையே பல சிறு பாதைகளால் இணைக்கப்படுகின்றன.

நகருக்கு வெளியில் ஐந்து முக்கியப் பாதைகள் செல்லுகின்றன. தென் மேற்காகச் செல்லும் பாதை தூண் பாறை (Pillar Rocks) களை நோக்கிச் செல்லுகிறது. மேற்குப் பக்கத்தில் செல்லும் பாதை, 12 கல் தொலைவில் அமைந்திருக்கும் 'பூம்பாறை' என்னும் சிற்றூரை அடைகிறது. அவ்விடத்தில் சிறந்த வானாய்வுக் கூடம் ஒன்று உள்ளது. வடக்குப் பக்கத்தில் செல்லும் நடைபாதை திருநெல்வேலிக் குடியேற்ற (Tinnevelli settlement)த்தின் வழியாக வில்பட்டியை அடைகிறது. நீர்வீழ்ச்சிக்கு அண்மையில் செங்குத்தான சரிவுகளுக்கிடையில் இவ்வழகிய சிற்றூர் அமைந்துள்ளது. கிழக்குப் பக்கத்தில் செல்லும் 'லாஸ்காட்' என்