பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

247

களின் தேவையை யறிந்து அவர்கள் தங்கிப் படிப்புதற்காக, இராப்பள்ளிகளைப் போன்று இரண்டு சிறிய கட்டிடங்களைக் கட்டினார். அவை பெரிய, 'பள்ளி யறை', 'சிறிய பள்ளியறை' என்று அழைக்கப்பட்டன. அப்பள்ளியைச் சுற்றி ரோஜாப்பூத் தோட்டமும், பைன் மரக்காடும் பேரிக்காய்த் தோட்டமும் அமைக்கப்பட்டன.

கி. பி. 1902-ஆம் ஆண்டு இப்பள்ளி 'செண்ட்ரல் ஹவுசுக்கும் (Central House) ராக் காட்டேஜு (Rock cottage)க்கும் மாற்றப்பட்டது. அப்போது திருமதி எட்டி அமெரிக்கா சென்றிருந்தார்கள். மீண்டும் இந்தியா திரும்பியபோது, ரூ 10,000 திரட்டிக்கொண்டு வந்தார். அப்பணத்தைக் கொண்டு சந்தைவெளியில் அமைந்திருந்த ஹைகிளெர்க் பள்ளியை விலைக்கு வாங்கினார். கி.பி.1902 முதல் 1904 வரை இவ்விடம் குமாரி ஓர்ல்பார் என்பவரால் குடிக்கூலிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் கொடைத்தன்மை மிக்கவர்; இந்தியாவில் பல இடங்களில் தங்கும் உணவுவிடுதிகளையும் (Boarding houses), கிருத்தவப் பாதிரிகளுக்கான தங்கல் மனைகளையும் நிறுவியவர். மீண்டும் இப் பள்ளி ஹைகிளெர்க்கிற்கு மாற்றப்பட்டது. உலகப்போர்கள் நடந்த சமயத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இங்குப் பணியாற்றினர். பொதுவாக அமெரிக்க ஆங்கில நாட்டுக் கல்விமுறைகள் இங்குக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஆனால், சில சமயங்களில் அமெரிக்க மாணவர்கள் மிகுந்திருந்த காரணத்தால் அமெரிக்க நாட்டுக் கல்வித்திட்டமே இப்பள்ளியிலும் மேற்கொள்ளப்பட்டது. ஆண் பெண் ஆகிய இரு பாலரும் இங்குக் கல்வி பயில்கின்றனர். கோடையில் தங்குவதற்காகக் கோடைக்கானல் வரும் பெற்றோர்களின், இளஞ்சிறுவர் சிறுமியர்களுக்கான 'கிண்டர் கார்டன் பள்ளி' ஒன்றும் ஆண்டுதோறும் மூன்று திங்கள்களுக்கு இங்கு நடத்தப்படுகிறது. அமெரிக்