பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

255

ஆண்டு பொதுமக்களால் படகுக் கழகம் துவக்கப்பட்டது. முதலில் தனிப்பட்டவரிடமிருந்து சில படகுகளை இக் கழகம் வாங்கியது. கள்ளிக் கோட்டையிலுள்ள 'சால்டர் அண்டு கம்பெனி' (Salter and co.) யிலிருந்து, 'கேட்ஃப்லை' (Gadfly), சேஃபர் (Chafer) என்ற படகுகளும் வாங்கப்பட்டன. படகுக் கழகத்தின் முதல் கௌரவச் செயலாளராக இருந்தவர் கேப்டன் கிளார்க் என்பவர்.

நாய்களைப் படகுகளில் அனுமதிப்பதில்லை. மெருகிடப்பட்ட படகுகளில் சிறுவர்களை ஏற்றுவதில்லை. சிறுவர்களுக்காக 'லிலி' என்ற படகு உள்ளது. கி. பி. 1894-ஆம் ஆண்டுக் காவற் படைக் குறிப்பு (police reports) களில் படகுக் கழகம் தீக்கிரையானதாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதனால் ரூ. 1779 பெறுமான பொருள்கள் சேதமுற்றனவாம். பொதுமக்களிடம் நன்கொடையாகப் பொருள் திரட்டிப் படகுக் கழகத்திற்குப் புத்துயிர் கொடுத்ததோடு, போக்குவரவிற்கு இடைஞ்சலாக ஏரிக் கரையோரங்களில் முளைத்திருந்த நாணல்களையும் அகற்றினர். ஒவ்வோர் ஆண்டும் 60 முதல் 80 உறுப்பினர்கள் வரை சேர்ந்துகொண்டே யிருந்தனர். உறுப்பினர் தொகை பெருகியதும், நிறையப் படகுகள் வாங்கப்பட்டன. கி. பி. 1897-ஆம் ஆண்டு , படகுக் கழகத்தின் செயற்குழுவில், புதுக்கோட்டை மன்னரின் இளவலாகிய துரை ராஜாவின் பெயர் காணப்படுகிறது. திருவாளர் மிச்சி ஸ்மித், வான் ஆய்வுக்கூடப் பொறுப்பாளர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், 'வின்ஸ்ஃ போர்டு' (Winsford) மாளிகையில் தங்கி வாழ்ந்தார். அப்போது படகுக் கழகத்தின் கௌரவச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அவர் வின்ஸ்ஃபோர்டு மாளிகையில் அமர்ந்தவண்ணம், தம் முடைய தொலை நோக்காடியின் மூலமாகப் படகுகளைக் கண்காணிப்பார். படகுக் கழகத்தின் விதிகள் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா எனக் கவனிப்