பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

திரசேகர ஐயர் ஆகிய பெரியார்கள், இக்கழகத்தின் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்.

இந்திய மாதர் பொழுது போக்குக் கழகம் :

இந்திய மாதர் பொழுது போக்குக் கழகம் (The Indian Ladies Recreation Club) என்ற ஒரு நிறுவனம் கடந்த சில ஆண்டுகட்கு முன் கோடைக்கானலில் ஏற்படுத்தப்பட்டது. இக்கழகம் கோடைக் காலத்தில் மட்டும் இயங்குகிறது. கிளென் வீழ்ச்சிக்கும் கான்வெண்டுக்கும் செல்லும் பாதையின் திருப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் இக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கழகம் சென்னையைச் சார்ந்த சீதாபதி ஐயரின் மனைவியால் துவக்கப்பட்டது.

நார்தெம் :

நார்தெம் (Nordhen) என்ற மற்றொரு கழகமும் கோடைக்கானலில் அமைந்துள்ளது. ஸ்வீடிஷ் குடியேற்றத்தில் வாழும் பாதிரிமாரும், டேனியப் பாதிரிமாரும் சேர்ந்து இக்கழகத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஸ்வீடிஷ் குடியேற்றப் பகுதியின் பெயர் நார்தெம் என்பதாகும். இவ்விடத்தில் இக்கழகம் கூடுவதால், இப்பெயர் பெற்றது. நார்தெம் என்ற சொல்லுக்கு 'வட நாட்டு மக்கள் மனை' என்பது பொருள். ஸ்வீடனும் டென்மார்க்கும் ஐரோப்பாக் கண்டத்தின் வட பகுதியாக அமைந்திருப்பதால், தங்கள் நாடுகளை 'வட நாடு' என்று இவர்கள் அழைக்கின்றனர் போலும். வாரத்தில் ஒரு நாள் இவர்கள் இங்குக் கூடுகின்றனர். அப்போது தேனீர்விருந்து, விளையாட்டு முதலியவை நடைபெறும். சில சமயங்களில் சொற்பொழிவுகளும் நடைபெறுவதுண்டு. கோடைக்கானலிலேயே சிறந்த இசை நிகழ்ச்சிகள் இங்குதான் நடைபெறுகின்றன. சில சமயங்களில் விளையாட்டுப் போட்டிகளும் இங்கு நடத்தப்படுகின்றன. இதில் பங்குகொண்டுள்ள பெரும்