பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/287

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

281

யிலும் யாருக்கும் விளங்கவில்லை. அக் குகையில் வாழ்ந்த பரதேசியைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை, முன்னாட்களில் பரதேசித் தோட்டத்திலும், அதைச் சுற்றியுள்ள தோட்டங்களிலும் பணிபுரிந்த கூலிகள் தங்குவதற் கேற்ற இடமாக இக்குகை பயன்பட்டு வந்தது.

'பேரடைஸ் எஸ்டேட்' என்று சொல்லக்கூடிய ஒன்பது தோட்டங்களும், அருவிக் கரைத்தோட்டமும், தூத்துக்குடியில் பிரபல வணிகராக விளங்கிய சி. எச். ஆர். கோக் என்ற டச்சுக்காரரால் விலைக்கு வாங்கப்பட்டன. காஃபி பயிரிடுவதற்காக அருகிலுள்ள நிலங்களையும் வாங்கி அவர் பண்படுத்தினார். அவருக்குப் பிறகு அந்நிலம் பலருடைய கைக்கு மாறித் தற்போதைய சொந்தக்காரரை அடைந்திருக்கிறது. இவைகளன்றி வேறுபல தோட்டங்களும் குற்றாலமலையின்மீது உள்ளன. அவைகளில் தெற்கு மலைத் தோட்டம், ஹோப் எஸ்டேட், குளிராத்தி, திரிகூடா சல பர்வதம் என்பவை குறிப்பிடத்தக்கவை. தெற்கு மலைத் தோட்டத்திலும், பரதேசிப் புதையிலும், அருவிக்கரைத் தோட்டத்திலும், காஃபி நல்லமுறையில் பயிராகின்றது. இலவங்கம், இலவங்கப்பட்டை , சாதிக்காய், மங்குஸ்டீன் முதலியனவும் இங்குப் பயிரிடப்படுகின்றன.

குற்றாலம் கோடைவாழ் நகரமாக மாறியதும், திருநெல்வேலித் தண்டலர், பாளையங்கோட்டை இராணுவத் தலைவர் (Commanding officer), வேறுபல உயர்ந்த அலுவலில் பணியாற்றும் ஐரோப்பியர் ஆகியோர் இங்கு மாளிகை அமைத்துத் தங்குவது பெருவழக்கு ஆகிவிட்டது. இங்குள்ள திருவாங்கூர் மாளிகை (Travancore Residency,) திருவாங்கூர் அரசபரம்பரையினருக்குச் சொந்தமானது. திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் தண்டலராக வந்த லூசிங்டன் துரை