பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

மெக்சிகோவிலிருந்து நேரே இரப்பர் விதைகளை வரவழைத்துப் பரவலான முறையில் அவர் பயிர் செய்யத் தொடங்கியதும், எல்லாத் தோட்ட முதலாளிகளும் தங்கள் காஃபித் தோட்டங்களில் ஒரு பகுதியை அழித்து விட்டு இரப்பரைப் பயிரிடத் தொடங்கினர். இப்பயிர்த் தொழிலும் ஓரளவு வெற்றிகரமாகவே இருந்தது. திருவாளர் நிக்கல்சன் விளைவித்த இரப்பர் இந்தியாவிலேயே உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தது என்று அரசியலார் ஒரு தங்கப் பதக்கமும், சான்றிதழும் அளித்தனர். உடனே சேர்வராயன் மலையிலுள்ள தோட்டக்காரர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படலாயிற்று. 1911-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 3816 ஏகர் நிலங்களில் 10,54,000 இரப்பர் மரங்கள் பயிரிடப்பட்டன. ஆனால், நாளாக நாளாக இப் பயிர்த் தொழில் குறைந்து கொண்டு வந்தது. இப்பொழுது அநேகமாகச் சேர்வராயன் மலைகளில் இரப்பர் தோட்டங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் காஃபிப் பயிரைப் போல் இது அதிக வருவாய் தரக் கூடியதாக இல்லை.


பழ வகைகள் :

சேர்வராயன் மலைகளில் அதிகமாக எல்லோராலும் பயிரிடப்படுவது, கெட்டியான தோலையுடைய செயிண்ட் மைகேல் (St. Michael) என்னும் ஆரஞ்சுப் பழமாகும். இந்த ஆரஞ்சு மரம் முழு வளர்ச்சியடைந்து நல்ல பலனைத் தர எட்டு ஆண்டுகள் பிடிக்கும். உயர்ந்த ரக ஆரஞ்சு மரங்களோடு ஒட்டிப் பயிரிட்டு இந்த இனத்தைச் சுவையுடையதாக்குகின்றனர். குடகு ஆரஞ்சு முதலில் குறைந்த அளவே பயிரிட்டனர். இப்போது இது நிறையப் பயிரிடப்படுகிறது. எலுமிச்சை எல்லாத் தோட்டங்களிலும் பயிரிடப்பட்டது. அது ரிவர் டேல் (River Dale) என்ற ஒரே தோட்டத்தில் மட்டும் விளைந்தது. மற்றத் தோட்